Wednesday, January 5, 2011

நீதிமன்றத் தீர்ப்பிலும் திருகுதாளம் செய்யும் எத்தர்கள்!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...


பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் கள்ளத்தனமாக பதிவு செய்து, கள்ள அரசியல் சங்கமாக செயல்பட்டு வரும் 'அயோக்கியர் தி கிரேட்' அண்ணன், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மூக்குடைபட்டதை மறைக்க, ''நீதிமன்றத் தீர்ப்பில் பாக்கர் பொய் சொல்வதாக தனது கள்ள அரசியல் சங்கத்தின் கள்ள வெப்சைட்டில் புலம்பியுள்ளார்.



மேலும் தனது கூற்றை நிறுவும் வகையில், நீதிமன்றத் தீர்ப்பின் நகலை அப்படியே ஸ்கேன் செய்து போட்டு ஏதோ பாரதூரமான ஆதாரத்தை முன் வைத்துவிட்டதாக காட்ட முனைகிறார். அவர் உண்மையாளர் என்றால், அவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவை நாங்கள் தமிழாக்கம் செய்து வெளியிட்டோமே அது போன்று அவர் நீதிமன்றத் தீர்ப்பின் முழு பிரதியையும் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் அளவுக்கு அவர் துணிச்சல் மிக்கவரா என்ன?



சரி விசயத்திற்கு வருவோம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் கள்ளசங்கம் தன் மகன் தலைமையில் இந்த அயோக்கியர் தொடங்கியதையடுத்து , எங்கள் தரப்பில் ஸிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில்,

நீதிபதி ஆனந்தி அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ஜெய்னுல் ஆபிதீனோ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் புதியதாக சோஷியல் ஆக்ட்டில் 2010இல் பதியப்பட்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் ஆகிய மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்ரஸ்ட் ஆக்ட்டில் பதியப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (பதிவு எண் : 45/2009) எந்த செயல்பாட்டிலும் தலையிடக்கூடாது என தீர்ப்பளித்தார்.



ஸிட்டி சிவில் கோர்ட்டிலே கீழே விழுந்த அண்ணன், ஹாய்! எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறிக்கொண்டு, கொல்லைப்புறமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது பற்றி பத்திரிக்கையில் வந்த செய்தி ததஜவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இன்றும் உள்ளது. அதில்,



''இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் [அதாவது பாக்கர்] இனி அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அமைப்பினரும் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.



இந்த தீர்ப்பு கிடைத்த மாத்திரமே துள்ளிக் குதித்த அண்ணனின் தம்பிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்த பாபர்மஸ்ஜித் போராட்டத்திற்கு இடைஞ்சல் செய்யும் நோக்கில் காவல் நிலையம் சென்று, நாங்கள் தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்; எங்களை தவிர வேறு யாரும் இந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றமே தடையாணை தந்துள்ளது பாருங்கள் என்றெல்லாம் செயல்பட்டனர்.



இந்நிலையில், முள்ளை முள்ளால் எடுக்கும் வகையில், இந்த அயோக்கியர் எந்த உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றாரோ அதே நீதிமன்றத்தில் இதஜ சார்பாக இந்தத்தடையை நீக்குமாறு மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில், இன்று (22 /12 /2010) தீர்ப்பளிக்கப்பட்டது.



நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில், எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயங்க எவ்விதத்தடையும் இல்லை என்று தீர்ப்பளித்ததோடு, இதஜ பெயர் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு ஸிட்டி சிவில் கோர்ட்டில் நடந்துவருவதால், அந்த தீர்ப்பு வரும்வரை 'டிரஸ்ட்' என்று போடவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.



நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் நாங்கள் என்ன பொய் சொல்லிவிட்டோம்..? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை எங்களைத்[ததஜ] தவிர வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்று இந்த அயோக்கியர் பெற்ற தடையாணையை உடைத்தோமா இல்லையா?



இப்போது நாங்கள் சட்டப்படி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்பதை இந்த பொய்யர் விளக்குவாரா?



மேலும் இந்த அயோக்கியர் தடையாணை பெற்றிருந்த நேரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போஸ்டரை காட்டி, எங்கள் அமைப்பு மாநில நிர்வாகிகள் 5 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி ஆகி இந்த அயோக்கியர் அவமானப்பட்டது தனி விஷயம்.



இப்படி இந்த அயோக்கியரின் சூழ்ச்சிகள் தொடராக அல்லாஹ்வின் உதவி கொண்டு இதஜ முறியடிப்பதால், அந்த அவமானத்தை மறைக்க, தானே மாபெரும் பொய்யராக, அயோக்கியராக இருந்து கொண்டு, நீதிமன்றத் தீர்ப்பில் பாக்கர் பொய் சொல்லிவிட்டார் என்று புலம்பித் திரிகிறார். மேலும் வழக்குகள் வரும் என்று பயம் காட்டுகிறார். அல்லாஹ்வைத் தவிர எந்த கொம்பனுக்கும் அஞ்சும் கூட்டமல்ல நாங்கள்; கம்பிக்கு பின்னால் செல்லும் நிலை வந்ததாலும் உம்மை கள்வன் என்றே கர்ஜிப்போம்; தூக்கு கயிறை முத்தமிட்டாலும் உம்மை[சமுதாய] துரோகி என்றே துணிந்துரைப்போம் இறைவன் நாடினால் என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment