Sunday, January 16, 2011

முதல்வரின் பஞ்சமி நில மீட்பு அறிவிப்பும் ! முஸ்லிம்களின் வக்ப் நிலம் அபகரிப்பும்!



வக்பு  நில  மீட்பு குறித்த புதிய தமிழகம் வார இதழ்

Puthiya Tamilagam 1.jpg Puthiya Tamilagam 2.jpg
முதல்வரின்  பஞ்சமி  நில  மீட்பு அறிவிப்பும் !
முஸ்லிம்களின் வக்ப் நிலம் அபகரிப்பும்!


நேற்று சட்ட சபை கூட்டத்தொடரில் முதல்வர் பஞ்சமி நில மீட்பு சம்பந்தமாக , பஞ்சமி நிலங்களை , கண்டறியவும் அவற்றை ஆக்கிரமித்து வைத்திருப்போரிடம் இருந்து மீட்கவும் ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்ட குழு அமைத்திருப்பதாக அறிவித்துள்ளார்! 


பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும்,
பஞ்சமி நிலங்களை விட பல நூறு கோடி மதிப்புள்ள முஸ்லிம்களின் வக்ப் சொத்துக்கள் 
தமிழகத்தில்  அரசியல் வாதிகளாலும் , அரசு அதிகாரிகளாலும் , பெரும்   பண முதலைகளாலும் , ஏன் அரசாங்கத்தாலும் அபகரிக்கப்பட்டு , பல வருடங்களாக கொள்ளை போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இப்பிரச்சனையை கையில் எடுத்து , இதற்கென திருச்சியில் ஒரு மாபெரும்
 மாநாட்டை நடத்தி  , அதில் இதை ஒரு கோரிக்கையாக வைத்திருக்கும் நிலையில்   
நம்முடைய கோரிக்கையை கண்டு கொள்ளாமல் ,  கம்னிஸ்ட்- களே மறந்து விட்ட 
பஞ்சமி  நில விவகாரத்தை முதல்வர் கையில் எடுத்து , அவற்றை மீட்க குழு அமைத்திருப்பது , வரும் தேர்தலில்  தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்துதான்  என்பது நமக்கு புரிகிறது!


அதே   சமயம் அதே வாக்கு வங்கி அரசியலை முஸ்லிம்களாகிய நாமும் சரியாய் பயன் படுத்தினோம் என்றால் இன்ஷா அல்லாஹ் வரும் தேர்தலை பயன் படுத்தி , தமிழகத்தில் 
ஆக்க்ரமிப்புக்குள்ளான கோடிக்கணக்கான வக்ப் நிலங்களை கண்டறியவும் மீட்கவும் 
ஒரு கமிட்டியை அமைக்க வலியுறுத்தலாம்! எப்படி இட ஒதுக்கீட்டை ஒட்டு மொத்த சமுதாயமும்  விழிப்புணர்வு பெற்று வலியுறுத்தி     பெற்றதோ , அது போன்று இந்த வக்ப் நில மீட்பையும் கையில் எடுக்க வேண்டும்! இது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கையாக மட்டும் இல்லாமல் ,இஸ்லாமிய இயக்கங்களின் கோரிக்கையாகவும் , ஒட்டுமொத்த முஸ்லிகளின் கோரிக்கையாகவும் சட்ட சபைத்தேர்தல் நேரத்தில் முன்னெடுக்கப் படுமானால் இன்ஷா அல்லாஹ் ஒரு லட்சம் கோடி பெறுமானமுள்ள நம் முன்னோர்களின் சொத்துக்கள் மீட்கக்கப்பட்டு தமிழக முஸ்லிம்களின் வாழ்வு மேம்படும்! முன்வருமா முஸ்லிம் சமுதாயம் ?


இவண் இப்னு ஹுசைன்.






          

0 comments:

Post a Comment