Friday, January 7, 2011

இலங்கையில் குட்டைப் பாவாடைக்கு தடை!





இலங்கையில் குட்டைப் பாவாடைக்கு தடைவிதிப்பது குறித்து கலாச்சாரத்துறை அமைச்சுதீவிரமாக ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறதுபொது இடங்களில் பெண்கள் எத்தகையஆடை அணியலாம் என்பது குறித்து அறிக்கை வெளியிடுமாறு கலாச்சார ஆதரவாளர்கள்வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து இலங்கை கலாச்சாரத்துறை அமைச்சகம் பொது இடங்களில் பெண்கள்குட்டைப்பாவடை அணிய தடை விதிக்க வேண்டும் என்ற புகார்களை பரிசீலித்துஇதுகுறித்துஒரு கமிட்டிக்கு அனுப்பி பொது இடங்களில் பெண்கள் எத்தகைய ஆடை அணியலாம் என்றபட்டியல் தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்கள் ஆடைகள் குறித்து அரசு இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லைஆனால்குட்டைப்பாவாடைக்கு தடைவிதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சிங்கள நாளிதழ்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஏகநாயகே, "இலங்கையில் பெண்களின் ஆபாச விளம்பரப் பலகைகளைஅகற்ற ஏற்கனவே உத்தரவுவிடப்பட்டுள்ளதுமதம் மற்றும் கலாச்சார பிரநிதிகள்குட்டைப்பாவாடை இலங்கையின் கலாச்சாரத்தை சீரழித்துவிடும் என்று வருத்தம் தெரிவித்து எனக்குஎழுதியுள்ளனர்சுற்றுலாப் பயணிகள் வருகையால் நிலைமை மேலும் மோசம் அடைந்துள்ளது"என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 குர்ஆனின் சிறப்பு
 
 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.AL-QURAN-24:30
 
 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
AL-QURAN-24:31
 
 தகவல்-நூருல் அமீன்.

0 comments:

Post a Comment