Tuesday, January 4, 2011

திரையைக் கிழித்து......



அன்பார்ந்த சகோதரர்களே...
 
மீண்டும் நெடு நாளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளை முடக்கும் முகமாக சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் போலியாக  சங்கப்    பதிவு செய்து,அது  தனக்குத் தான் சொந்தம் என்று மல்லு கட்டி  வழக்குத் தொடர்ந்து கடைசியில் மன்னைக்கவ்வியுள்ளார்.இது மக்களுக்கு தெரிந்த விஷயம்.ஆனால்   தெரியாத விஷயம்...இது தான்:
  
சிட்டி சிவில்    கோர்டில்  இ த ஜ     தொடர்ந்த வழக்கில் அது கொடுத்த தீர்ப்பை மறுத்து ,ஹய் கோர்ட்டில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனை வைத்து வழக்கை போட்டார்.  வழக்கறிஞர் பிரபாகரன் ஏற்கனவே   இ.த.ஜ.வின் சார்பாக முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வல வழக்கில்  ஆஜரான செல்வாக்கு மிக்கவர்.இவரை போய் இந்தியா தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வருவதாகக்கூறி,அணுகியுள்ளனர்.அவரும் முத்துப்பேட்டை விவகாரத்தில் ஆஜரான இ.த.ஜ. என நினைத்து இவர்களுக்காக  ஆஜராகி கோர்ட்டில் தனது  வாதத்திறமையால்  தடை   ஆணை பெற்றுத் தந்து விட்டார்.ஆனால் பிறகுதான் அவருக்குத் தெரிந்தது இ.த.ஜ. பெயரில் தன்னை ஏமாற்றியது.அதனால் அவர் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.இவர்கள் வேறு வழக்கறிஞரை வைத்து வழக்கை நடத்தினர்.
இந்த கால கட்டத்தில்,வழக்கறிஞர்களுக்கும்,வழக்கிற்கும் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.இவை யாருடைய பணம்.ஜைனுல் ஆபிதீனின் அப்பன் வீட்டுப் பணமா?வளைகுடா மக்கள் மார்க்க பிரச்சாரதிற்காகவும்,சமுதாய நலனுக்காகவும் தரும் பணம் அல்லவா?இதை வீணடித்திருக்கிறார்.,
 
இன்னும்,கோர்டில் அவர்கள் போலியாக பதிவு செய்த ஜாமத்தின் சொத்து மதிப்பு என்று சுமார் 27 லட்சங்கள் வரை கணக்கு காட்டி, சுமார் 27 ஆயிரம் வரை பீஸ் கட்டி இருக்கிறார்கள்.புது அமைப்பிற்கு ஏது இவ்வளவு பணம் ? அது வேறு ஒன்றும் இல்லை.மதுரை திருமங்கலத்தில் ஜைனுல் ஆபிதீன் பெயரில் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாத்திற்கு கொடுக்கப்பட்ட  நிலத்தை இதுவரை இவர் ஜமாஅத்  பெயருக்கு மாற்றித் தரவில்ல. அந்த  ஜாமத்தின்   நிர்வாகிகளும் இதுபற்றி கேட்கத் தயங்குகின்றனர்.இதை தற்போதைய திருச்சியிலிருக்கும் அந்த  தலைவரும் தந்து நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அது தப்பு தான்.ஆனா அதை யார் கேட்பது என்று புலம்பியதாக கேள்வி. இந்த சொத்தைத்தான் தனது மகன் பெயரில் ஆரம்பித்த ஜமாத்தின் சொத்தாக மாற்றி விட்டாரோ என யோசிக்கும் அந்த ஜமாத்தின் நிர்வாகிகள் அதைப்பற்றி கேட்கத் தயங்குகிறார்களாம்.
 
இதுவரை ஜமாத்திற்கு ஏன் மாற்றித் தரவில்லை?இவர் மரணித்து விட்டால் என்ன நிலவரம்? அமானிதம் அல்லவா அந்த சொத்து?
 
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுது முடித்த கையோடு வேகமாக தனது இல்லத்திற்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிவாசலுக்கு திரும்புகிறார்கள்.அப்போது நபித்தோழர்கள்,யா ரசூலுல்லாஹ் வேகமாக வீட்டிற்கு
 போய்  வந்தீரே!தொழுத  உடன் இப்படி நீங்கள் வேகமாக செல்ல மாட்டீர்களே என்ன விஷயம் என கேட்ட போது, ஒருவர்   அமானிதமாக கொடுத்த வெள்ளிப்பொருள் ஒன்றை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டதையும், அதை ஆயிஷா (ரலி)அவர்கள் தமக்கு உரியதாக  எண்ணி பயன்படுத்தி  விடக்கூடும் என்பதால்,தொழுகை முடிந்ததும் ஓடிச் சென்றேன்    என்று சொன்ன ஹதீஸை பல முறை மக்களுக்கு சொன்ன ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இப்படி செய்யலாமா?என்று அப்பாவி மக்கள் கேட்கிறார்கள்.
 
உங்களோடு நான்
 

0 comments:

Post a Comment