Friday, January 7, 2011

கர்கரே தன்னுடன் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் திக்விஜய் சிங் !





டெல்லிமும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த மகாராஷ்டிரதீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேதன்னுடன் பேசியது தொடர்பானஆதாரத்தை இன்றுவெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்.
 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில்ஹேமந்த் கர்கரே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்இந்த நிலையில்சமீபத்தில்திக்விஜய் சிங் திடீரெனகர்கரே கொல்லப்படுவதற்கு முன்பு தன்னுடன் போனில்பேசினார்.அப்போது இந்து தீவிரவாத அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்துஇருப்பதாக அவர் கூறினார் என்று கூறியிருந்தார்இதற்குக் கடும் கண்டனங்கள்எழுந்தனகர்கரேவின் மனைவியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால் தனது பேச்சுக்கு உரிய ஆதாரம் இல்லை என்று பின்னர் பல்டி அடித்தார்திக்விஜய் சிங்இந்த நிலையில் தற்போது ஆதாரம் இதோ என்று கூறி அதை இன்றுவெளியிட்டுள்ளார்.
2008
ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மாலை தன்னை கர்கரே தொடர்பு கொண்டு பேசியதாககூறியுள்ளார் திக்விஜய் சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில்மிகக் கடுமையாக முயன்று பிஎஸ்என்எல்நிறுவனத்திடமிருந்து இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பான விவரங்களைப்பெற்றுள்ளேன்.மகாராஷ்டிர ஏடிஎஸ் அலுவலகத்திலிருந்து, 022-23087336 என்ற எண்ணிலிருந்துஎன்னைத் தொடர்புக் கொண்டார் கர்கரே மாலேகான் வழக்கில் தனக்கு எதிராக பாஜகவும்சிவசேனாவும் தீவிரமாக உள்ளதால்,தனக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கர்கரே அப்போது என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் நான் சொன்னதை யாரும் நம்பவில்லைமேலும்மகாராஷ்டிர உள்துறைஅமைச்சர் ஆர்.ஆர்பாட்டீல் எனது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்ஆனால்இப்போது ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன்எனவே எனனைக் கண்டித்த அனைவரும்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சிங்.
 
 

0 comments:

Post a Comment