Thursday, January 27, 2011

நீலச்சாயம் வெளுத்து போச்சு! பி.ஜே.வேஷம் கலைஞ்சு போச்சு!

                                    அல்லாஹ்வின் திருப்பெயரால் ...


நீலச்சாயம் வெளுத்து போச்சு!  பி.ஜே.வேஷம் கலைஞ்சு போச்சு!


அலஹபாத் நீதி மன்றத்தின் அநியாய தீர்ப்பு வந்ததும் , இந்தியாவே அமைதியாக இருந்த நேரத்திலே ,இயக்கமே தடை செய்யப்பட்டாலும் , எங்களை சிறையில் அடைதலும் பரவாயில்லை என   இந்திய தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கி போராடிய போது , பம்மி பதுங்கிய பி.ஜே., இனி நீதி மன்றங்களை நம்பக் கூடாது! என்றார்,  பின்னர்  உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருப்போம்! என மண்ணடி கூட்டத்தில் மறு பல்டி அடித்தார்! பின்னர்  வளை குடா மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு , வேறு வழியின்றி போராட்டம் அறிவித்தார் !


காயப்  பட்ட உடன் காயத்திற்கு மருந்திடுவதை விட்டு , அலஹபாத் தீர்ப்பால் மக்கள் மனங்கள் காயப்பட்டிருந்த   அந்தநேரத்தில் போராடாமல் , பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் ஆறு அன்றும் போராடாமல் , மூன்று மாத காலத்திற்கு பின் தள்ளி வைத்து , முதலில் ஒரு தேதியும் , பின்னர் அதையும் தள்ளி ஜனவரி 27 என அறிவித்தார்கள். காரணம் கேட்ட போது மக்களை திரட்டவே தாமதம்! என கூறினார். 


'எத்தனையோ சிறிய படைகள் பெரிய படைகளை வென்று உள்ளது'    
'சின்னக் கூட்டம்தம்மா  ஜெயிக்கும்' என்று கூறிய பி.ஜே , இன்று 'எண்ணிக்கை கிறுக்கு' பிடித்து   பொதுக் கூட்டமானாலும் ,  போராட்டமானாலும் ,  பெரும் கூட்டத்தை காட்டினால் தான் தன் இமேஜை தக்க வைத்து கொள்ளலாம்   என்று எண்ணி பெருமை எனும் பெருங்குழியில் வீழ்ந்து கொண்டுள்ளார்!


 'ஒரு எஸ்.எம்.எஸ்.இல் பத்தாயிரம் பேரை கூட்டுவோம்'  என ஜமாலியிடம் சவடால் விட்டவருக்கு எதற்கு இத்தனை கால அவகாசம் என கேட்ட போது  லட்சக்கணக்கில்    மக்களை திரட்டுவதற்காக தான் என்றார். ஜூலை நாலை மிஞ்சும் கூட்டத்தை கூட்டுவோம் என்றவருக்கு ஏமாற்றமே மிச்சம்!


மதுரையிலும் சென்னையிலும் கூடிய மொத்தக்கூட்டமே பதினைந்தாயிரத்தை தாண்டவில்லை என்கிறது உளவுத்துறை! இதற்க்கா இவ்வளவு கால தாமதம்? இவ்வளவு  லட்சம் செலவு?  சுவர் விளம்பரம் , வீதி எங்கும் பேனர்கள் , பத்திரிக்கைகளிலும் ,தொலைக்காட்சியிலும் விளம்பரம்,  என லட்சக்கணக்கில் முதலிடு செய்து தேர்தலில்   கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க நினைத்த   இவரின் எண்ணத்திற்கு அல்லாஹ் சரியான பாடம் புகட்டியுள்ளான்!


சென்னையில் ஒருங்கிணைந்த த,த.ஜ.வில் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு மாவட்ட மக்களை விட பெரிதான கூட்டமில்லை இந்த தமிழகத்தின் பாதி பகுதிகளில் இருந்து வந்த நேற்றைய  கூட்டம்!
அது மட்டுமின்றி அது சிறை செல்ல தயாராய் வந்த கூட்டம். இது சிறைக்கஞ்சி முற்றுகையை தவிர்த்து , உயர் நீதிமன்றத்திற்கு    பேரணி செல்ல முற்ப்பட்டால் கைது செய்வோம் என போலீஸ் சொன்னதால் , கைது என்றால் மக்கள் மறு முறை வரமாட்டார்கள், மேலும் எண்ணிக்கையும் தெரிந்து விடும்   என்பதால் , பல லட்சம் என மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்காக மெமோரியல் ஹால் அருகே பி.ஜே.பேசி முடித்ததும் கலைந்து   சென்ற கூட்டம்.


மெமோரியல்  ஹால் அருகில் வந்து நின்று கத்தி விட்டு  களைந்து செல்வதற்க்கா இவ்வளவு பில்டப் !  அதிலும் இவர்கள் விளம்பரம் செய்த 
சன்  டி.வி  தவிர எந்த ஊடகமும் இந்த போராட்டத்திற்கு முக்கியதுவம் அளிக்கவில்லை. இந்திய தவ்ஹித் ஜமாத்தின் உயர் நீதி மன்ற மன்ற முற்றுகைக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இந்த போராட்டதிற்கு இல்லை என்பதால் அண்ணன் மிகுந்த கோபத்தில் இருப்பதாக கேள்வி ! அதுவும் தன் கலந்து கொண்ட சென்னையை விட மதுரரையில் சற்று கூடுதல் கூட்டம் என்பதால் அது இன்னும் சற்று அதிகரித்திருக்கும்!


ஏற்கனவே  பெருநாள் தொழுகையில் ஜமாத்தின் மொத்த எண்ணிக்கை 6900 தான் என உளவுத்துறைக்கு  தெரிந்து போனதை ஈடு கட்ட, பொது பிரச்சனையை கையில் எடுத்து மக்களை கூட்டலாம் , அதன் மூலம் தேர்தல் பேரம் பேசலாம் என எண்ணியிருந்த அண்ணனின் மனக் கோட்டையிலும் மண் விழும் போல் இருக்கிறது!


திருவிட   சரி படுகொலைக்குப் பின் மக்கள் இவர்களை நம்பத் தயாரில்லை என்பதினால் தான் இந்த பின்னடைவு! மூன்று மாதம் முககியும் பெருநாள் தொழுகைக்கு வந்த கூட்டத்தை விட கூடுதலாக ஒரு பங்கு அதாவது இவர்கள் குடும்பத்தினர் உள்பட 6900 பேர் எனும் போது இன்னும் ஒரு மடங்கு தான் இவர்களின் பேச்சை கேட்டு வாக்களிப்பார்கள் என்றால் , முஸ்லிம் லீக் சமிபத்தில் தாம்பரத்தில் கூட்டிய கூட்டத்தை விட குறைவென்றால் தி.மு.க. கூட்டணியில் என்ன கிடைக்கும்? ஜெயலலிதாவிடமும் எதுவும் தேறாது! ஏற்கனவே த..மு.மு.க. அங்கு பொய் சேர்ந்து விட்டது!


  பாவம் அண்ணன் தேர்தலை நம்பி இறக்கிய பணம். முதலுக்கே மோசமாக பொய் விட்டது! அண்ணனின் வியாபாரம் இந்த முறை தோற்றாலும் , தக்லீதுகளை தக்க வைக்க ஜூலை நாலை விட இருமடங்கு என,  அதாவது ஐம்பது லட்சம் என சொல்லி வளைகுடா வசூலை வைத்து ஓட்டலாம்! 'தமிழகத்தின் மொத்த முஸ்லிம்களே அவ்வளவு பேர் இல்லை ' என்பதை அறியாத  அப்பாவி த்க்லீதுகள் அதையும் நம்பித் தலையட்டலாம்! அது வரை வண்டி ஓடும்.
    



0 comments:

Post a Comment