Tuesday, January 25, 2011

பாபர் மசூதிக்கான போராட்டம் அர்த்தமற்றது! அண்ணனின் அடுத்த பல்டி !

மீள் பதிவு!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பாபர்மஸ்ஜித் விஷயத்தில் தீர்ப்பு வந்த மாத்திரமே பயாஸ்கோப் முன் தோன்றிய அண்ணன், தீர்ப்பு குறித்து கருத்து சொன்னதோடு விஷயத்தை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம் என்று நினைத்த வேளையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நீதிமன்ற முற்றுகை போராட்டம் அவரை அடுத்த ஸ்டெப்புக்கு தள்ளியது. உடனே மண்ணடியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பும்- முஸ்லிம்களின் கடமையும் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை போட்டார்.

இந்த கூட்டத்தில் பாபர்மஸ்ஜித் தீர்ப்பு குறித்து அண்ணன் ஏதாவது முக்கியமான கருத்தை சொல்வார் என எதிர்பார்த்து கூட்டமும் கனிசமாக வந்தது. கூட்டத்தை பார்த்து குஷியான அண்ணன், 'மினி மாநாடு' என்று தனது தம்பிகள் மூலம் எஸ்.எம்.எஸ். பறக்கவிட்டு புளங்காகிதம் அடைந்தார். சரி! தனது பேச்சில் ஏதாவது சொன்னாரா என்றால், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை பொறுமை காப்போம். அதிலும் நியாயம் கிடைக்கவில்லையெனில் பின்னர் அறிவிப்போம்' என்று முடிக்க, அவரை பின்பற்றுபவர்களுக்கே அண்ணனின் பேச்சு 'சப்பென்று' போக, இதையறிந்த அண்ணன் செங்கல்பட்டு செயற்குழுவில் சென்னை- மதுரையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என அறிவித்து தம்பிகளை குஷிப்படுத்தினார்.

பாபர் மசூதிக்காக சாவகாசமாக அடுத்த வருஷம் போராட்டம் அறிவித்து விட்டாலும், போராட்டம் பயனற்றது எனபதுதான் அண்ணனின் நிலைப்பாடு என்பதை 'உணர்வலைகளாக' இப்படி வெளிப்படுத்துகிறார்.

''தனது பொறுப்பில் சில ஏக்கர் நிலங்கள் வந்துவிடும் என்பதால் அவர் [முஹம்மது ஹசீம் அன்சாரி] திருப்தி அடைந்துள்ளார். அல்லாஹ்வை வணங்கிய இடத்தில் சிலைகள் வணங்கப்படுவது அவருக்கு பெரிதாக தெரியவில்லை. யாருக்கு மேல்முறையீடு செய்ய உரிமையுள்ளதோ அவர் மேல்முறையீடு செய்ய தயாராக இல்லாத நிலையில் நாம் இங்கே கூப்பாடு போடுவது, மக்களை ஏமாற்றும் நாடகமாகத்தான் இருக்கமுடியும்.'' என்று எழுதியுள்ளார்.


அதாவது பாபர் மசூதிக்காக போராடுவதில் அர்த்தமில்லை என்று சொல்லி, முஸ்லிம்களின் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம் பயனற்றது என்ற மனநிலையை முஸ்லிம்களிடம் உண்டாக்க முனைகிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் கூறுகிறார்;
''பின் வாங்கி விலை போகும் நிலையில் உள்ளதால், உள்ளூர் முஸ்லிம்களும் விட்டால் போதும் என்ற மனநிலையில் உள்ளதாலும், பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது. இதுதான் யதார்த்த நிலை. இதை மூடிமறைத்து வேஷம் போடுவதிலும் -கோஷம் போடுவதிலும் இனி அர்த்தமில்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது. என்கிறார் அண்ணன்.

பாபர் மஸ்ஜித் போராட்டம் பயனற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது என்று சொன்னதன் மூலம் பாபர் மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம்கள் பலவீனமாகி விட்டார்கள் என்ற கருத்தை இந்துத்துவாக்களுக்கும் சொல்கிறார். சரி! பயனற்ற இந்த போராட்டத்தை ததஜ ஏன் செய்யவேண்டும் என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தங்களது போராட்டத்தில் இரு அமசங்களை முன்வைக்கிறார்கள்.

1.தீர்ப்பளித்த நீதிபதிகளை கண்டித்தல்.
2.உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளல்.

இந்த இரு அம்சங்களை பொருத்த வரையில், நீதிபதிகளை ஏற்கனவே அண்ணன் கண்டித்து விட்டார். இனிமே புதுசா வேற வார்த்தைகளில் கண்டிக்கப் போவதில்லை. அடுத்து சிவில் வழக்கை நீதிமன்றம் அதுவும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்குமா என்பதும் அவருக்கும்-சட்ட நிபுனர்களுக்குமே வெளிச்சம். ஆக, ஒருபுறம் போராட்டம் அர்த்தமற்றது என்று சொல்லிக்கொண்டு, மறுபுறம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்திவிட்டதால் வேறு வழியில்லாமல் அண்ணன் போராட்டம் நடத்துகிறார் என்பதே அண்ணனின் இயலாமை உணர்வலைகள் மூலம் வெளிப்படுகிறது.

--
11/12/2010 06:34:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment