Saturday, January 22, 2011

பாபர் மசூதிக்காக போராட தகுதியற்ற த.த.ஜ.





மீள் பதிவு 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
செங்கிஸ்கானை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதை இன்று (30.09.2010) காலை விண்டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உங்கள் நிகழ்ச்சியில் காண முடிந்தது.

சென்ற 13.09.2010 அன்று எங்கள் ஊர் கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதை போட்டார்கள். அதில் அடுக்காக அடுக்காக அண்ணன் பிஜே அவர்களை நோக்கி கேள்விகள் கேட்டார்அவர் கேட்ட கேள்வியில் எனக்கு பிடித்தது? ஜாக்கிற்கு சொந்தம் என சொல்லி கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும், மேலாப்பாளையம், கடையநல்லூர் பள்ளிவாசல்களை ஆக்ரமித்தீர்கள். இப்போது திருச்சி சிங்கார தோப்பு பள்ளியிலும் அதே நிலையை கடைப்பிடிக்கிறீர்கள். இது என்ன நியாயம் என தெரியவில்லை.

S.P.பட்டிணத்தில் உள்ள பள்ளியின் உரிமையாளர் எங்கள் அமைப்பை சார்ந்தவர், அவர் எங்களுக்கு எழுதி தந்து விட்டார் என சொல்லும் நீங்கள், நீதிமன்றமே ஜாக் அமைப்புக்குதான் சொந்தம் என சொல்லும் பொழுது இந்த 3 ஊர் பள்ளிகளையும் பிடித்து வைப்பது முரண்பாடு இல்லையா?

அத்துடன் மட்டும் அல்ல, S.P.பட்டிணம் பள்ளி, அல்லாஹ்வை வணங்கப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. கேட்டால் சுன்னத் வல் ஜமாஅத்தார் கையில் சென்று ஷிர்க், பித்அத் செய்வதை விட மூடிக் கிடப்பது மேல் என நினைத்து மூடி உள்ளீர்களோ! அப்படியானால் பாபர் மஸ்ஜித் பள்ளிவாசல் மட்டும் உத்திரபிரதேச சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு கிடைக்க நீங்கள் ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? பாபரி மஸ்ஜித் நிர்வாகத்தார் தவ்ஹீத் ஜமாஅத்காரர்களா? சொல்லுங்கள்.  அங்கு மட்டும் ஷிர்க், பித்அத் நடைபெறாதா?!!!

வடநாட்டில் 60 வருட காலமாக பிரச்னைக்குரிய பள்ளிவாசலை ஒரு சுன்னத் வல் ஜமாஅத்காரர்களிடம் ஒப்படைக்க நீங்கள் போராடுவீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஆர்.எஸ்.எஸ்காரனும் பிரச்னை வைக்காத S.P.பட்டிணம் பள்ளிவாசலை கடந்த ஒரு வருட காலமாக பூட்டுவீர்கள். இது அநியாயம் இல்லையா?

முரண்பாடு என்றால் நீங்கள்தானோ என அவர் கேட்ட நியாயமான கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. நீங்கள் சொன்னது போல் செங்கிஸ்கானின் நியாயமான கேள்விகளை சிந்தித்து பார்க்க வேண்டுமே தவிர அவரை வசைபாடுவதில் அர்த்தம் இல்லை.

இப்படிக்கு
கடையநல்லூர் மீரான்.



0 comments:

Post a Comment