Sunday, January 30, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[13] just4jokes






செய்தி; அகமதாபாத் வணிக கல்லூரி பாடப்புத்தகத்தில் ரஜினியின் "முத்து" படம் இடம் பெற்றுள்ளது. 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்படியே பொறியியல் கல்லூரியில் பாட்ஷா; சட்டக்கல்லூரியில் எந்திரன் இப்பிடி வரிசையா கொண்டாந்திருங்க. மாணவர்கள் நல்லா உருப்பட்டிருவாங்க!
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்; இந்தியாவில் மாநில அரசுகள் எல்லாம் ஏஜெண்டுகளாக மட்டுமே செயல்படுகின்றன. சட்ட மன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்ற முடியுமே தவிர அதை சட்டமாக கொண்டு வர முடியாது. சட்டமாக கொண்டுவர வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எனவே அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் தான் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும். இதனால் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும். தனிகொடி வேண்டும். மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும் என்பது தான் இறையாண்மை. 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்நீங்க சொல்ற இறையாண்மை என்பது மீண்டும் குறுநில மன்னர்களை உருவாக்குவது போலல்ல்லவா உள்ளது? மாநிலங்களுக்கு முழு அதிகாரம், தனிக்கொடி எல்லாம் தந்து விட்டால் தனி நாடு ஆகிவிடாதா?
 
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி; வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்நீங்க வெங்காய விலைய பத்தி வாய் தெறக்குறதுக்குள்ள தக்காளி விலை ஏறிப்போச்சு. அதோட நீங்க பெட்ரோல் விலையை  ஏத்தியதால  எல்லாப் பொருளும் கண்டிப்பா விலை ஏறத்தான் போகுது. அதுனால ஒவ்வொன்னுக்கும் சொல்லிக்கிட்டு இருக்காம, விலைவாசியை கட்டுப்படுத்துவோம்னு மொத்தமா சொல்லீடுறது நல்லது. 
 
திருமண நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு;  தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மணமக்கள் தங்கள்  குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவேண்டும். 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்மொதல்ல உங்க பெயரை தமிழ்ல மாத்திட்டு, பெறகு வந்து எங்ககிட்ட சொல்லுங்கன்னு மணமக்கள் சொல்லமாட்டாங்க என்ற தைரியத்துல பேசுறீக போல.
 
முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி:
வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பிடி சொல்றதோட விட்டுட்டா எப்பிடி? மரணித்துவிட்ட பெரியாரிடம் எப்படி கேக்குறதுங்கிற வழியையும் உங்க பகுத்தறிவு மூலமா சொன்னா  தேவலை.
பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன்;  வாஜ்பாய் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த, ஒப்பற்ற தலைவர். சிறந்த பொக்கிஷம். ஆசியாவிலேயே மிக உயர்ந்த தலைவர். ஆகவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியே தீரவேண்டும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; விருதுங்கிறது தேடி வந்த காலம் மலையேறி, தந்தே தீரவேண்டும் என்று மிரட்டி வாங்கும் காலம் வந்து விட்டதோ..?
 
நடிகர் விஜயகுமார்பேரன் விஜய் ஸ்ரீஹரி பெயரில் நிறைய கறுப்பு பணத்தை நான் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனால்தான் குழந்தையை விட மறுப்பதாகவும் சொல்கிறார்கள். நிறைய பணம் என்னிடம் கிடையாது. நான் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனோ, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியோ அல்ல. சாதாரண கவுரவ வேஷம் போடும் நடிகர்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏனுங்க! அமிதாப் மேலயும், ரஜினி மேலயும் உங்களுக்கு என்ன கோவமுங்க.? சந்தடி சாக்குல அவங்ககிட்ட கருப்புப் பணமோ, அல்லது  வெறும் பணமோ  நெறையா இருக்குங்கற மாதிரி சொல்றீங்களே..? 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா; தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எனது தலைமையிலான அரசால் 18.5.2004 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதையும், மீண்டும் சிறுபான்மை இன மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


பஞ்ச் பட்டிக்காட்டான்; ரத்துப் பண்ணினது நான்தான்னு சொல்ற நீங்க, அந்த சட்டத்தை கொண்டு வந்ததே நான்தான்னு சேர்த்து சொன்னா நல்லாயிருக்கும். 


தமிழ்நாடு பனைத்தொழிலாளர் வாரிய தலைவர்  குமரி அனந்தன்; பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். முதல்அமைச்சர் கருணாநிதி, படிப்படியாக அதனை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். விரைந்து நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைப்போம். அதனைவிடுத்து, சட்டவிரோதமாக கள் இறக்கிவிற்போம் என்று கூறுவது நியாயமாகாது.


பஞ்ச் பட்டிக்காட்டான்ஓட்டுக்காக சில கட்சிகள் கள் இறக்குவதற்கு ஆதரவளிக்குற இந்த காலத்துல, பனைவாரியத் தலைவரா இருந்துக்கிட்டு கள்ளுக்கு எதிரா பேசுற நீங்க உண்மையிலிலேயே காந்தியவாதிதான்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்; எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்.


பஞ்ச் பட்டிக்காட்டான்2006 ல்  புதுவையில்  ஆட்சி ; 2011 ல் தமிழகத்தில் ஆட்சி என்று முன்னாடி சொன்னீங்க. இப்ப திடீர்னு இன்னொரு அஞ்சு வருஷம் தள்ளிப் போட்டதுக்கு என்ன காரணமோ..?


கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி: திருவாரூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்காக கருணாநிதி இருக்கிறார். மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் நலனுக்காக அழகிரி இருக்கிறார். சென்னை பகுதிகளின் நலனுக்காக ஸ்டாலின் இருக்கிறார். அதுபோல், கொங்கு நாட்டிற்கு யாரும் இல்லாததால், கொங்கு நாட்டுக்கு வரவேண்டிய திட்டங்கள் வருவதில்லை.



பஞ்ச் பட்டிக்காட்டான்ஏன் இப்பிடி சுத்தி வளைக்கிறீங்க..? எங்க கொங்கு மண்டலத்துக்கு  ஒரு குறுநில மன்னர் வேணும்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே!
-by mugavai abbas.

0 comments:

Post a Comment