Tuesday, January 25, 2011

திருட்டு ஜமாத்தின் திருச்சி அராஜகம்!

திருட்டு ஜமாத்தின் திருச்சி அராஜகம்!


திருச்சி சிங்கார தோப்பில் ஜாக் அமைப்பிற்கு சொந்தமான தமிழகத்தின் பழமையான தவ்ஹீத் பள்ளிவாசல் ஒன்று உள்ளது! அடுத்தவர் உடமையை அபகரிப்பதையே பிழைப்பாக கொண்ட அண்ணனின்  அபகரிப்பு சூழ்ச்சியால் பலவருடங்கள் சட்டப் போராட்டம் நடத்திய ஜாக் அமைப்பினர் கடந்த வருடம்  'பள்ளிவாசல் ஜாக்கிற்கு சொந்தம்' என்ற தீர்ப்பை பெற்று வந்தும் இன்னும் இவர்களிடம் இருந்து மீட்க முடியாமல் உள்ளனர்.


காரணம் 'நாங்கள் தான் உண்மையான இந்திய தவ்ஹித் ஜமாஅத்' என்று இப்போது திருத்தனம் செய்து போல்  ''நாங்கள் தான் உண்மையான திருச்சி ஜாக்'  என திருகு தாளம் செய்து  ஐம்பது பேரை சோறு போட்டு அங்கேயே தங்க வைத்து கொண்டு  நீதி மன்றத்தையே  ஏமாற்றிக் கொண்டு  உள்ளனர்.


கடந்த வாரம் ஜும்மாவில் ஒருவர் தவற விட்ட நூறு ரூபாயை  எடுத்து  தவற  விட்டவர் வந்து பெற்றுக் கொள்ளலாம்  என அறிவிப்பு செய்துள்ளனர்!   இந்தப்பள்ளியில் ஜும்மா தொழ சென்ற நம் திருச்சி சகோதரர்   பள்ளி வாசலில் தவற விட்டதை எடுத்து கொடுக்கிறீர்கள் ஆனால் பள்ளிவாசலையே  எடுத்துக்கொண்டு  கொடுக்க மாட்டேன் என்கிறீர்களே! என முணு முணுத்துக்கொண்டு வெளியேற , இதை கேட்ட அந்த திருட்டு  ஜமாத்தின் நிர்வாகி ' கேட்க காது கூசுமளவிற்கு  வார்த்தைகளை கொண்டு அவரை திட்டியுள்ளார் !


அது மட்டுமின்றி அங்கு வெளியில் நின்று நோட்டீஸ் கொடுத்து கொண்டிருந்த நம் சகோதரை  தடுக்க 'அவர் நான் தெருவில் நின்று கொடுக்கிறேன்  உங்களுக்கு என்ன? நீங்கள்  மற்ற சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் கொடுக்கலாம் ! நாங்கள் கொடுக்க கூடாது! என கூற அவரையும் '....மகனே என மோசமான் வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.      


எந்த அளவிற்கென்றால் 'பள்ளிவாசல் உள்ளே நின்று அசிங்கமான வார்த்தைகளை  பேசுகிறீர்களே !நீங்கள் எல்லாம் தவ்ஹீத்வதிகளா ? என தொழ வந்த பெண்கள்  கண்டித்து  இனி நாங்கள் இங்கு வரமாட்டோம் ' என்று  கூறுமளவிற்கு அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு அர்ச்சிதுள்ளனர்.


அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; 
நயவஞ்சகனின் குணங்கள் நான்கு! பேசினால் பொய்  பேசுவான் 
வாக்களித்தால் மாறு செய்வான்! நம்பினால் மோசடி செய்வான்!
வழக்காடினால் வசை பாடுவான் !


மேலும் நபி [ஸல்] கூறினார்கள் 
எவர் ஒருவர் பிறருக்கு சொந்தமான் நிலத்தை அபகரிக்கிறாரோ;
அவர் அதை தான் கழுத்தில் சுமந்தவராக வருவார்.        
     
இன்ஷா அல்லாஹ் நாளை இவர்கள் சிங்கார தோப்பு  பள்ளிவாசலை சுமந்து வரும் 
அந்த நாளில் அல்லாஹ்விடம் இவர்களின் செயல்களை விட்டு விடுவோம்!     


         

0 comments:

Post a Comment