Saturday, January 29, 2011

அடக்கஸ்தலம் கோரி தடையை மீறி INTJ ஆர்பாட்டம்! ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை !

அடக்கஸ்தலம் கோரி தடையை மீறி INTJ  ஆர்பாட்டம்!
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை 

Picture 025.jpg

வேளச்சேரி, தரமணி, மடுவங்கரை பகுதி மக்களின் பல வருட கோரிக்கையான அடக்கஸ்தல கோரிக்கையை கண்டு கொள்ளாமல் 'நாய்களை புதைக்க நகரின் மத்தியில் இடம் வழங்கிய ' மாநகராட்சி மற்றும் தி.மு.க.மேயரை கண்டித்து   இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நேற்று மாபெரும் ஆர்பாட்டம் நடை பெற்றது!  

Picture 027.jpg


சமுதயாத்திற்கு ஒன்று என்றால் முதலில் களமிறங்கும் ,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போர்க்குணம் மிக்க நிர்வாகிகள் , எதையும் வித்தியாசமான கோணத்தில் கையில் எடுத்து ,இறையருளால் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார்கள். நேற்றைய தினம் வேளச்ரியில் நடந்த் இந்த போராட்டத்தை சந்தூக்கு ஏந்திய போராட்டமாக அறிவித்து சந்தூக்குகளோடு வந்து குவிந்தனர். 

Picture 013.jpg


வேளச்சேரி மாநகராட்சி முற்றுகை என்றதும் அனுமதி மறுத்த காவல் துறை அனுமதி மறுத்து ,உணர்ச்சி மிகு பிரச்னை என்பதால் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் காவல் துறையினரின் படை குவிக்க பட்டு பத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இருந்தும் ஆய்வாளர் உள்பட அனைவரும் குவிந்திருந்தனர்.


Picture 040.jpg

கண்டன உரை நிகழ்த்திய முஜிபுர் ரஹ்மான் பாகவி, நாய்களை விட நம்மை மோசமாக மதிக்கும் மாநகர மேயரை கண்டித்தார்.  தர்வேஷ் ரசாதி வரும் தேர்தலில் மக்கள் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என குமுறினார் ! விடுதலை சிறுத்தைகள் யூசுப் 'இனி யாரையும் நம்பி பயன் இல்லை! நம்முடைய உரிமைகளைப்பெற நாம் களமிறங்க வேண்டும்! அப்படிப்பட்ட  போராட்டங்களுக்கு சமுதாயம் பாக்கர் தலைமையில் ஒன்று பட வேண்டும் 

Picture 021.jpg
என உணர்ச்சி வசப்பட்டார் !இறுதியாக பேசிய எஸ்.எம்.பாக்கர் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இறந்தவர்களை அடக்க இடம்   கேட்டு போராடுவது தமிழக அரசுக்கே அவமானம் ! இந்த நிலை நீடித்தால் அடுத்த மய்யித்தை கோபாலபுரத்தில் அடக்குவோம் ' என கூறியபோது அல்லாஹு அக்பர் என ஆர்ப்பரித்தது  கூட்டம் !    
           
சந்தூக்கில் பிணக் கோலத்தில் ஏறி படுத்த ஒருவரை தடுத்தது! எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை இல்லையா? என பொங்கி எழுந்த மக்களை கண்டு போலீஸ் அடங்கியது! ஆரம்பத்தில் கெடுபிடி செய்த காவல் துறை பின்னர் பணிந்தது. .ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து கொண்டு செல்ல வாகனமின்றி 
திணறியது .
Picture 036.jpg


சந்தூக்கையும்  போலீஸ் வேனில் ஏற்றிய போது இந்திய வரலாறில் ஒரு சந்தூக்கு கைது செய்யப்படுவது முதல் முறை என கமென்ட் அடித்து கலகலப்பூட்டினார்  .அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் அடைக்கப்பட்ட உடன் , அதையும் வழக்கம் போல் மக்களுக்கு மார்க்கத்தை சொல்லும் இடமக்கினார் , மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா.

Picture 039.jpg

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இஹ்லாஸ் ஆன செயல்பாடுகளால் நமது செயற்குழு, பொதுக்குழு , மற்றும்   பொதுக்கூட்டங்களில் யாராவது ஒருவர் இஸ்லாத்தை  ஏற்பது வழக்கமாகியுள்ளது  . அந்த வகையில் நேற்றைய போராட்ட காலத்திலும் ஒருவர் 
இஸ்லாத்தை ஏற்றார் .அவருக்கு கலிமாவை தர்வேஷ் ரஷாதி சொல்லிக்கொடுக்க 
முகமத் இர்பான் என பெயர் இடப்பட்டது.

     
Picture 030.jpg
அசர்,மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஜமாஅத்தாக   தொழுத போது , நம்முடைய தொழுகை அணிவகுப்பையும் தொழும் முறையையும் கட்டுப்பாடு மிக்க இராணுவத்தின் செயல்களாக வியந்து பார்த்தனர் காவல் துறையினர். மக்ரிப் தொழுகைக்குப் பின் அனைவரையும் விடுவித்தனர்.  
   Picture 011.jpg
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!    

0 comments:

Post a Comment