Sunday, January 30, 2011

சஞ்சய் காந்திக்கும்- சங்பரிவாருக்கும் என்ன சம்மந்தம்..?




மகன் ராகுல் -   தந்தை சஞ்சய் 



காங்கிரஸ் கட்சி 125 ஆண்டுகள் ஆவதையொட்டி காங்கிரஸ் வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை ஆசிரியராக கொண்டு இந்த புத்தகத்தை தயாரித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போதைய கால கட்டம் வரை நடந்த பல்வேறு சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  அதில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 1975-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட “எமர்ஜென்சி” பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தவிர்க்க முடியாத சூழலில் அன்று இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று புத்தகத்தில் கூறியுள்ளனர். எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு அதை நடை முறைக்கு கொண்டு வந்த போது தொடக்கத்தில் மக்கள் அதை வரவேற்றார்கள். ஆனால் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன், குடிசைகளை கட்டாயமாக காலி செய்ய வைத்தது போன்றவை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த சஞ்சய்காந்தி காரணமாக இருந்தார். இது எதிர் மறைவான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், அயோத்தி பிரச்சினையில் நரசிம்மராவ் கணிப்பு தவறி விட்டது. பாபர் மசூதி இடிப்பை அவர் தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டார் என்றும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதில் சஞ்சய்காந்தி பற்றிய விமர்சனங்களுக்கு பாய்ந்து வந்து காங்கிரஸ்  மீது பாய்கிறது பாரதீயஜனதா கட்சி. சஞ்சய்காந்தி, இந்திரா காந்தி காலத்தில்  காங்கிரசில் இருந்தவர். அவர் பாஜகவில்  இருக்கவில்லை. சஞ்சய் மீதான விமர்சனம் தவறு எனில், அது பற்றி காங்கிரசின் ஏனைய தலைவர்களோ, அல்லது சஞ்சயின் மனைவி மேனகா காந்தியோ, சஞ்சயின் மகன் வருண் காந்தியோ கருத்துக் கூறியிருந்தால் அது சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும். ஆனால் அவர்களே மவுனமாக இருக்கும் நிலையில், சங்க்பரிவாரத்தை  சேர்ந்த ஷா நவாஸ் உசேன் மற்றும்  ராஜ்நாத் சிங் ஆகியோர், மேனகா காந்தியும் வருண் காந்தியும்  பாஜகவில் இருப்பதால்தான் காங்கிரஸ், சஞ்சய்காந்தி மீது குற்றம் சாட்டியுள்ளது என கூறுகின்றனர்.
சங்பரிவார் சஞ்சயை ஆதரிப்பதற்கு காரணம் இதுவல்ல. மாறாக அவசர நிலை பிரகடனத்தின் போது, குடும்பக்கட்டுப்பாடு  விஷயத்தை முஸ்லிம்கள் மீது திணித்ததாக சஞ்சய்காந்தி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனவே அந்த விசுவாசத்திற்காகவே சங்பரிவார் சஞ்சய்காந்திக்கு ஆதரவாக கொடி பிடிக்கிறது என்பதே உண்மை. உண்மை இதுவல்ல என்று சங்பரிவாரம் மறுக்குமானால், ''அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சமந்தம்? என்பார்களே அதுபோன்று, சங்பரிவாருக்கும்-சஞ்சயுக்கும் என்ன சம்மந்தம் என கூறவேண்டும். கூறுவார்களா?

0 comments:

Post a Comment