Saturday, January 8, 2011

பெண்களின் கல்வியை தடுக்கும் பிற்போக்குவாதி பி.ஜே.

பெண்களின் கல்வியை தடுக்கும் பிற்போக்குவாதி பி.ஜே.


ஏக இறைவனின் திருப்பெயரால் ...

சமிப காலமாக தன்னுடைய மனோ இச்சைப்படி மார்க்க விசயங்களில் விளையாடி வரும் பி.ஜே. இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்கிற பெயரில் மக்களின் கேள்விகளுக்கு மனம் போன போக்கில் பதில் அளித்து வருகிறார்.

முதலாவதாக இஸ்லாம் எளிய மார்க்கம் என சொல்லில் கூறும் இவர் செயலில்  தொழுகையை முறையாக    கடை பிடிக்காததன் மூலம் இஸ்லாத்தை சிரம மார்க்கமாக காட்டுகிறார். சமிபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நாத்திகர்கள் கேட்ட கேள்விக்கு இவர்களிடத்தில்  பதில் இல்லை ! அதிகாலையில் பாங்கு சொல்லி மக்களை சிரமப்  படுததுகிறீர்கள்!  என்ற குற்றச்சாட்டிற்கு ' அதிகாலையில் விழிப்பது ஆரோக்கியம் அது சிரமமில்லை' என இவர்கள் கூற 'உங்களில் எத்தனை  பேர் அதிகாலை தொழுகைக்கு சிரமம் இன்றி எழுந்திரிக்கின்றீர்கள்?  உங்களாலேயே செயல் படுத்த முடியாத நீங்கள் மற்றவர்களை ஏன் சிரமப்படுதுகிறீர்கள்! என்ற போது இவர் உள்பட  பலர் நெளிந்ததை காண முடிந்தது!

மார்க்க வரம்புகளை மீறி மற்றவர்களின் உரிமையிலும் , உடமைகளிலும் , கை வைத்து அவர்களின் மானத்தோடும்  கண்ணியத்தோடும் விளையாடி , அல்லாஹ்வின் இல்லங்களையும் , அடுத்தவரின் சொத்துக்களையும் அபகரிக்கும் ,   சொல்லொன்றும் செயல் ஒன்றுமான இவரின் செயல்பாடுகளால், இஸ்லாத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் இவர், இஸ்லாம் எளிய  மார்க்கம் என்று மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்வது நகைப்புக்குரியது! 

சமிபத்தில் ஒரு தொலைக்காட்சி கேள்வி பதில் நிகழ்ச்சியில் பெண்களை மேற் படிப்பு படிக்க வைக்க தேவையில்லை ! என்று கூறியது அதிச்சி அளித்தது! மார்க்க அடிப்படையில் விளக்காமல்  படித்த மாப்பிள்ளை கிடைக்காததுதான் காரணமாம்! .ஏன் படித்த பெண்ணுக்கு படித்த மாப்பிளைதான் வேண்டுமா? ஏன் படிக்காத ஆணும் படித்த பெண்ணும் சேர்ந்து வாழ மார்க்கத்தில் என்ன தடை?

அப்படியே ஒரு காரணம் இருந்தாலும் ஆண்களும் அந்த விகிதத்தில் கல்வி கற்பதை ஊக்கப் படுத்துவதை விட்டு விட்டு , ஆண்டாண்டு காலத்திற்கு பின் இப்போது தான் பெண்கள் கல்வி விழிப்புணர்வு பெற்று முன்னேறி வரும் வேளையில் , ஆணுடைய கல்வி அவனுக்கு மட்டுமே பயன் தரும் பெண் கற்கின்ற கல்வி ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் பயன் தரும் என்று த.த.ஜ. மாணவர் அணி    நிர்வாகிகள் கூறி வரும் நிலையில் பெண் கல்வியை முடக்கும் பி.ஜே.வின் இந்த கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது!





வேதத்தின் முதல் வசனமே கல்வி குறித்த வசனம் தான் என்று பெருமை கொள்ளும் மார்கத்திலே ,  பெண்களுக்கென தனியாக ஒரு நாளை ஒதுக்கி போதித்த நபிகளாரின் நடை முறை உள்ள மார்கத்திலே , என்றும் , மஹராக கல்வியை கேட்டுப் பெற்ற மார்க்கத்திலே , எதிரியிடத்தில் பிணைத் தொகையாக கல்வியை கேட்டுப் பெற்ற மார்க்கத்திலே  இருந்து கொண்டு பெண் கல்விக்கு எதிராக பேசலாமா?

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கியுள்ளது! என முஸ்லிமல்லாதவர்களிடம் சொல்லும் இவர் இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் இப்படிக் கூறுவது முரண்படில்லையா ?  மகளிருக்கு இஸ்லாம் உயர்கல்வியை மறுக்கிறதா?

காரணங்களை களையாமல் காரியங்களை தடுப்பது மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்றதாகும்!  பெண்களுக்கு பாதுகாப்பற்ற இன்றைய சூழ்நிலை எனக்கூறுவது  எல்லாவற்றிற்கும் பொருந்தும் ! பெண்களை பள்ளிவாசலுக்கு வரவிடாமல் தடுக்க சுன்னத் வல் ஜமாத்தினர் இதே காரணத்தை சொன்ன போது நீங்கள் சொன்ன விளக்கம் இதற்கு பொருந்தாதா? 

இதே காரணம் நீங்கள் நடத்தும் ஆலிமா படிப்பு கல்லூரிகளுக்கு  பொருந்தாதா? கடைய நல்லூரில்   ஓரின சேர்க்கை நடந்தற்காக உங்களின் ஆலிம் வகுப்புகளை எல்லாம் மூடி விடுவீர்களா?  

உங்கள்  மகளின் நிலையை வைத்து உலகத்தை எடை போடாதீர்கள் !
உங்கள்  மனோ இச்சைப்படி மகளிர் கல்விக்கு தடை போடாதீர்கள்!  

        by  ibnu hussain.  

0 comments:

Post a Comment