Friday, January 7, 2011

ஆட்டைய'ப் போட்டது அரசியலுக்காகவா?












பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

பிரபல 'அயோக்கியர் தி கிரேட்' பொய்யர் பீஜே, ஒரு விஷயத்தை கூடாது என்பார். பின்பு அதே விஷயத்தை நொண்டி வியாக்கியானம் கூறி நடைமுறைப் படுத்துவார். தமுமுகவிலிருந்து பிரியும் கடைசி காலகட்டத்தில், 'தேர்தல் களப்பணி ஆற்றினால் ஈமான் போய்விடும்' என்று ஏகத்துவ இதழில் எதுகை மோனையுடன் எகத்தாளம் எழுதினார். அவரே தக்லீத் ஜமாஅத் கண்டவுடன் அதே தேர்தல்  களப்பணியை தானும் செய்து தனது தக்லீதுகளையும்  செய்ய வைத்தார்.

''யாரைத் தேர்ந்தெடுத்தாலும்   லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை'' என்று அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989 ல் தலையங்கம் தீட்டியவர், அதை மறந்து தக்லீத் ஜமாஅத்  உதயமானபின் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் பிரச்சார பீரங்கியாக மாறி, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தக்லீத் ஜமாஅத் உதயமான புதிதில் கொடி இல்லை. அந்த காலகட்டத்தில் 'இது கொடி பிடிக்கும் கூட்டமல்ல; கொள்கைக் கூட்டம்' என்று தனது கம்பெனி ஆலிம்கள் மூலமாக சொல்ல வைத்தார். பின்பு அவரே கொடியை உண்டாக்கி தாங்களும் கொடி பிடிக்கும் கூட்டம்தான் எனக் காட்டினார்.

இதையெல்லாம் இங்கே  திடீரென்று எழுத என்ன காரணம் என நினைக்கிறீர்களா?  காரணம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிட மாட்டோம். உங்களை காட்டி எந்த பதவியும்  பெறமாட்டோம் என்பது அண்ணனின் சூளுரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதிலிருந்து வழக்கம் போல அண்ணன் பல்டியடித்து அரசியலில் சங்கமிக்கும் ஆரம்ப பணியை செய்துள்ளார் என்று நான் சொன்னால் ஆச்சர்யமாக உள்ளதா?  ஆனாலும் உண்மை சகோதரர்களே!

எங்கள் தலைவர் பாக்கரால் உருவாக்கப்பட்ட  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை குடும்ப உறுப்பினர்கள் மூலமாக கள்ளத்தனமாக பதிவு செய்த அண்ணன், பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்; பாக்கர் மீது நடவடிக்கை  எடுக்க  வேண்டும் என்று கூறி, கள்ளச்சங்கத்தின் உண்மையான பொதுச்செயலாளரும், தனது மைத்துனருமான ஹிதாயத்துல்லாஹ் என்பவர் மூலம் சென்னை காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும், சங்கப் பதிவாளருக்கும் அனுப்பிய மனுவில்,

''இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஒரு அரசியல் இயக்கம் என்றும், இந்த இயக்கம் சுமார் 3 வருடங்களுக்கு முன் எங்கள் தலைவர் j .முஹம்மது  மூலம் தொடங்கப்பட்டது. தற்போது இது பதிவு பெற்ற இயக்கமாக ஆகியுள்ளது''என்று கூறியுள்ளார் அண்ணன்.

ததஜ வை அரசியல் அமைப்பாக ஆக்கமுடியாது. எனவே தமுமுகவுக்கு ஒரு மமக போல், நாம் பாக்கர் அமைப்பை களவாடி அதை அரசியல் அமைப்பாக பதிவு செய்து அதற்கு தனது இளவலை தலைவராக்கி, மைத்துனரை பொதுச் செயலாளராக்கி   அரசியலில் தடம்   பதிக்கும்  ஆரம்ப காயை நகர்த்தவே                   அண்ணன் அபகரிப்பு வேலையை அரங்கேற்றியிருக்கிறார் என்பது புலப்படுகிறது.

'நாங்கள் ஒருக்காலும் அரசியலுக்கு போக மாட்டோம் என்று இந்த அயோக்கியர் தி கிரேட் சொல்ல வருவாரானால், புகார் மனுவில், அரசியல் இயக்கம் என்று நாங்கள்  சொன்னது பொய்தான்  என்று ஒத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல், ஏற்கனவே அயோக்கியர்தான் என்று ஒத்துக் கொண்டதுபோல், பொய்யர்தான் என்று ஒப்புக்கொண்டதாகவும் ஆகிவிடும்.

இன்னும் இந்த பொய்யர், பாக்கர்  அமைப்பை அபகரித்தது தவ்ஹீதுக்காகவே என நம்பும் அப்பாவி தக்லீதுகளுக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 


0 comments:

Post a Comment