Thursday, January 20, 2011

''ஏன்டா கிறுக்குப் பயலே; ஜனவரிக்கும் பாபர் மஸ்ஜிதுக்கும் என்ன சம்மந்தம்..? சொன்னது நானில்லை. சாட்சாத் பீஜேதான்.


மறு பதிவு;


ஒவ்வொரு ஆண்டும் டிச. 6 அன்று பாபர் மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் ததஜ, இந்த ஆண்டு நடத்தவில்லை. நாங்கள் ஜனவரியில் நடத்துகிறோம் என்று காரணம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், மற்ற அமைப்புகள் போராட்டம் நடத்திவிட்ட நிலையில் நாம் நடத்தாதது மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உண்டுபண்ணி விட்டதே என்று உணர்ந்த அண்ணன், போராட்ட 'கிரவுண்டு' மாறிவிட்டது; மைதானம் மாறிவிட்டது என்றெல்லாம் வியாக்கியானம் அளித்தார். அதோடு நிற்காமல் இப்போது போராட்டம் பற்றி உணர்விலும் சில வியாக்கியானங்களை கொடுத்துள்ளார்.


உணர்வு 15 ;15 நாடும் நடப்பும் பகுதியில்,
''எந்த தீர்ப்புக்காக காத்திருந்தோமோ அந்த தீர்ப்பு அரசியல் தனமாக மாறிப்போச்சு. இனியும் டிச.6 ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தா 'இவர்கள் வருடத்தில் ஒருநாள் கோஷம் போட்டுவிட்டு கலைந்துவிடும் கூட்டம்' என்று அரசும் நம்மை கண்டு கொள்ளது விட்டுவிடும்'' என்கிறார்.


டிச. 6 அன்று போராட்டம் நடத்துவது அன்றைய தினம் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் என்பதால்தான். அன்றைய போராட்டத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையோடு, பாபர் மஸ்ஜிதை இடித்த கயவர்களை தண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படும். தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாபர் மஸ்ஜித் இடம் தொடர்பாக மட்டுமே. இடித்த குற்றவாளிகள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், உலகமெங்கும் உற்று நோக்கும் இந்த நாளை விடுத்து சாவகாசமாக அடுத்த ஆண்டு சம்மந்தமில்லாத நாளில் ஆர்ப்பாட்டம் பேரணி என அலம்புவது ஏன்?


மேலும் டிச 6 அன்று போராட்டம் நடத்துவதில் உள்ள முக்கியத்துவம் பற்றி இதே பீஜே முன்பு கூறியதை பாருங்கள்;


''எந்த நாளில் மக்கள் உணர்ச்சியோடு இருப்பார்களோ அந்த நாளை இதுக்குப் பயன்படுத்துனாத்தான் சக்சஸ் ஆகும். இப்ப வந்து ஜனவரியில் வாங்க பாபர் மஸ்ஜிதுக்கு போராடுவோம்னு சொன்னா, 'ஏன்டா! கிறுக்குப் பயலே!! ஜனவரிக்கும் பாபர் மஸ்ஜிதுக்கும் சம்மந்தம் என்னன்னு கேட்ருவான். வரமாட்டான் மக்கள்.


மக்களுக்கு இயல்பாகவே போராட்டத்துல கலந்துக்கிறதா இருந்தா அத ஊக்குவிக்கக் கூடிய உந்துதல் இருக்கணும். அப்பிடி இருந்தால்தான் வருவார்கள். அப்ப எந்த நாளில் உந்துதல் இருக்கும்? இடிச்ச நாள்னு சொல்லும்போதுதான் கோபம் வரும் அவனுக்கு. இன்னைக்குத்தான் இடிச்சாணுவ; உடக்குடாது என்று.


அப்ப எந்த நாளில் மக்கள் வருவார்களோ அந்த நாளை பயன்படுத்துனத்தான் போராட்டமா இருக்குமே தவிர, அது சடங்கு; சம்பிரதாயம்னு சொல்லிட்டு, டிசம்பர விட்டுட்டு, பிப்ரவரில நடத்துனீங்கன்னு வைங்க நீங்கதான் போய் நிக்கணும். அப்ப முஸ்லிம்கள் மறந்துட்டாங்கன்னு ஆயிரும். மறக்கலன்னு காட்டுறதுக்குத்தான் போராட்டம் நடத்துறோம். எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் அதன் ரிசல்ட் என்ன வரும்னு ஒரு அறிவுடைய தலைமை யோசிக்கணும்.


நீங்க சொல்றத கேட்டு வருஷத்துல ரெண்டு தடவையோ; அல்லது வேற வேற மாசத்துலையோ நடத்துனோமேயானால் இப்ப எப்பிடி கொந்தளிப்போட, உணர்ச்சியோட வந்து நிக்கிறாங்களோ அந்த அளவுக்கு வந்து நிக்க மாட்டாங்க. அதுனால எந்த நாளில் மகளை திரட்ட முடியுமோ அந்த ஆளில் நடத்துரோமே தவிர அது ஒரு சடங்கு அல்ல என்று புரிஞ்சுக்கணும்.


மேலே உள்ளவைகள் அனைத்தும் அண்ணனின் 'உதிர்ந்த முத்துக்கள்', அவரே கூறியபடி ''ஏன்டா கிறுக்குப் பயலே; ஜனவரிக்கும் பாபர் மஸ்ஜிதுக்கும் என்ன சம்மந்தம்..?


என்று மக்கள் கேட்கும் அளவுக்கு ஜனவரியில் போராட்டம் என்று அறிவித்து கேலிக்குள்ளாகி நிற்கிறார்.


அடுத்து உணர்வில்,
'' நீங்க [ததஜ] ஆர்ப்பாட்டத்தை நடத்தாததால் இன்னிக்கு லேட்டேர்பேடு அமைப்புகளெல்லாம் ஆர்ப்பாட்டம் பன்றோம் பேர்வழின்னு இறங்கி இருக்காங்க. இதில் வேடிக்கை என்னன்னா.. ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் அஞ்சு பேர், பத்துபேர் போராட்டத்துக்கு போயிருக்காங்க. என்கிறார் பீஜே.
மேற்கண்ட பீஜேயின் பத்திரிக்கை செய்தியை கவனமாக படியுங்கள். அதாவது ததஜ போராடததால்தான் மற்ற அமைப்புகள் போராட முன் வந்ததாம். வேடிக்கைதான் போங்கள். அடுத்து, போராட்டம் நடத்திய அமைப்புகளையும், கலந்துகொண்ட மக்களையும் இழிவு படுத்தும் வகையில் அஞ்சு பேர் பத்துப்பேர் என்றெல்லாம் எழுதி தனது இயலாமையை வெளிப்படுத்துகிறார். தமிழ் பத்திரிக்கைகள எதுவும், குறிப்பாக பார்ப்பன சிந்தனை கொண்ட பத்திரிக்கைகள் கூட இவர் கூறியது போல போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை அஞ்சு பேர் பத்துப் பேர் என்று செய்தி போட்டதில்லை. இவர் இப்படி போடுகிறார் என்றால் இவர்தான் சமுதாயப் போராளியா? இவரது உணர்வுதான் சமுதாயப் பத்திரிக்கையா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.


மேலும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை குறைத்து கணக்கிடுவது பற்றி இவர் தீவுத்திடலில் 15 லட்சம்[!?] பேரை திரட்டி நடத்திய மாநாடு நேரத்தில் கூறியதை பாருங்கள்;


''அரசாங்கம் தொடர்ந்து முஸ்லிம்களை புறக்கணித்து வரும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் போராட்டங்களில் அனைத்து இயக்கங்களும் எண்ணிக்கையை மிகைப்படுத்தியே கூறுவார்கள். கூறியுள்ளனர். வந்த மக்களின் தலைய எண்ணி எந்த இயக்கத்தினரும் கூறுவது கிடையாது. பொய்யன் பாக்கர் இந்த விஷயத்தில் அனைவரையும் மிஞ்சியவர் என்பது மக்களுக்குத் தெரியும். இந்த விஷயத்தில் திடலின் நீள அகலத்தை அளப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்து சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர்களே!


அன்று தீவுத்திடலில் 15 லட்சம் பேரை எப்படி அமரவைக்க முடியும் என்று அறிவுப்பூர்வமாக கேட்ட கேள்விக்கு அண்ணன் சொன்ன வார்த்தைகள்தான மேலுள்ளவை. ஆனால் இன்று அல்லாஹ்வின் ஆலயம் விஷயத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றி பொய்யான தகவலை தனது பத்திரிக்கையில் எழுதியதன் மூலம், அன்றைக்கு பாக்கருக்கு அவர் சூட்டிய பட்டத்தை அவரே இன்று தனக்கு சூட்டிக்கொண்டு விட்டார்.


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

0 comments:

Post a Comment