Tuesday, January 4, 2011

அபகரிப்பு- மோசடி குறித்த மார்க்க விஷயங்கள் அண்ணனுக்கு பொருந்தாதா?


அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...
எஸ்.எம். பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெயரை தனது குடும்ப உறுப்பினர்களை  கொண்டு, அபகரித்த 'அயோக்கியர் தி கிரேட்' அண்ணன் பீஜேயின் அபகரிப்பு- மோசடி பற்றி மார்க்க அடிப்படையில் சில ஆதாரங்களை  வைத்தோம். படிக்க; http://intjonline.in/1298.do

அதன் முடிவில்,
குறிப்புமேலே குறிப்பிட்டுள்ள குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் பொருள் சம்மந்தப்பட்டவை. நான் அபகரித்தது பாக்கரின் அமைபைத்தான்; அமைப்பு என்பது பொருள் அல்ல. எனவே முகவை மண்ணாங்கட்டி[!?] எடுத்து வைத்த வாதம் சரியல்ல என்று அண்ணன் வியாக்கியானம் தரலாம். அண்ணனின் வியாக்கியானத்திற்கு 'அல்லாஹு அக்பர்' போட தயாராக இருங்கள்.
என்று முடித்திருந்தோம்.

அல்லாஹ்வின் நாட்டப்படி நாம் கூறியது போலவே,  முகவை அப்பாஸ்''மோசடி செய்யக்கூடாது என்று கூறும் குர் அன் வசனங்களை எடுத்துக் காட்டி தவ்றான இடத்தில் பயன்படுத்தியுள்ளார். என்று அண்ணன் கும்பல் புலம்பியுள்ளதோடு, கீழ் கண்ட வாதத்தையும் வைத்துள்ளது. 

 நாங்கள் பதிவு செய்தது சங்கம். நீ பதிவு செய்தது ட்ரஸ்ட். இரண்டுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இரண்டின் வகையும் வேறு. இரண்டின் பதிவு எண்ணும் வேறு. இரண்டின் பெய்ரும் வேறு
ஒன்று  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
இன்னொன்று  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட்
இப்படி  இருக்கையில் மோசடி என்று திசை திருப்புவதை விட்டு விட்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி மானத்தை காப்பாற்றிக் கொள்.
என்று கூறியுள்ளனர்.
 
டிரஸ்ட்- சங்கம் என்று தேய்ந்த ரிக்கார்டாக திரும்ப திரும்ப புலம்ப வேண்டாம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் அமைப்புத் தொடங்கியது பாக்கரா? அல்லது பொய்யர் பீஜே கும்பலா? 
 
அந்த பெயரில் நேற்று [எட்டு மாதத்திற்கு முன்] கள்ளத்தனமாக பதிவு செய்து விட்டு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்   எனும் பெயரை எங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதி மன்றத்தில் தடையாணை  பெற்றது மோசடியா இல்லையா? 
 
பாக்கரோடது டிரஸ்ட்- என்னோடது சங்கம். அது வேறு இது வேறு என்று கூறும் பொய்யர் கும்பல், தங்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்றால், குறைந்த பட்சம் பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் செயல்பட கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றல்லவா வழக்கு தொடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து நேற்று கள்ளத்தனமாக பெயர் வைத்துக்கொண்டு, உண்மையான உரிமையாளன் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது  என்று தடையாணை  பெறுவது மோசடி இல்லையா? 
 
மேலும், தடையாணையை காட்டி, அல்லாஹ்வின் ஆலய மீட்பு போராட்டமான பாபர் மஸ்ஜித் போராட்டத்தை காவல்துறை மூலம்  கெடுக்க நினைத்தது மோசடி இல்லையா?
 
மேலும் பெயரை களவாடியதோடு, பாக்கரின் அமைப்புக்கு சொந்தமான கலரை பயன்படுத்தியதும்,  போஸ்டர் அடித்ததும், அதில் பாக்கர் கொடியை போட்டதும் மோசடி இல்லையா?
 
இப்படி அடுத்தவன் அமைப்பை அபகரித்ததோடு , அடுக்கடுக்கான மோசடி செய்யும் அயோக்கியர் தி கிரேட் கும்பல், அபகரிப்பு- மோசடி தொடர்பான ஆதாரங்கள் தனக்கு பொருந்தாது என்பது விந்தைதானே!  ஆமாம்! அவர்களுக்கு தேவை எனில், அப்பாவி மக்களின் காசை கோடிக்கணக்கில் கொட்டி வல்லத்தில் பள்ளம் தோண்டிய மாநாடு குறித்த கேள்விக்கு மக்கா வெற்றி பற்றிய ஹதீஸ் பொருந்தும். ஆனால் அபகரிப்பும்- மோசடியும் அவர்களே செய்திருந்தாலும் அதுபற்றிய ஆதாரம் மட்டும் அவர்களுக்கு பொருந்தாது. எல்லாம் தக்லீதின் தாக்கம்தான். 

-முகவை அப்பாஸ்.

0 comments:

Post a Comment