Sunday, January 30, 2011

அண்ணே ! என்னே உங்கள் தேர்தல் நிலைபாடு?


தேர்தல் நிலைபாடு
1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும் தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்க்ளைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
யாருக்கு ஆதரவு ?
2. தேர்தல் கூட்டணிகளும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் இன்னும் வெளிவராத காரணத்தாலும் தேர்தல் நடத்தை விதி இன்னும் நடைமுறைக்கு வராததால் ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை கடைசி நேரத்திலாவது செய்ய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தாலும் நிலைமை தெளிவானவுடன் மாநில செயற்குழுவைக்கூட்டி யாருக்கு ஆதாரவு என்ற முடிவை எடுக்க செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்குவது என்று இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது


கேள்வி கேட்க எவருமில்ல்லாத நிலையில் தன் விசுவாசமான அடிமைகளைக் கொண்டு, தான் விரும்பிய நிர்வாகத்தை கொண்டு தானே தலைவரான   சேலம் பொதுக்குழுவில் தன்னுடைய தேர்தல் நிலைப்பாடு தீர்மானத்தின் மூலம் தன்னுடைய தரத்தையும் நிறத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். பொதுவாக கோரிக்கை அடிப்படையில் தான் தேர்தல் நிலைப்பாடு எடுக்கப்படும். யாருக்கு ஆதரவு என்பதை தான் சமுதாய அமைப்புகள் அறிவிக்கும்! ஆனால் யாருக்கு எதிர்ப்பு என்பதை முதலில் அறிவித்து ம.ம.க.வை தோற்கடிப்பது தான் தான் முதல் குறிக்கோள் என்பதை அறிவித்து  இவருடைய விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் தேர்தல் நிலைப்பாடு என்பதை பொய் .ஜே தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளார். பி.ஜே.பி.நிற்கும் தொகுதிகளில்  கூட இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதும் சங் பரிவாரங்கள் கூட தமிழகத்தில்  ஒரு முஸ்லிம் கட்சியை தோற்கடிப்போம் என பொதுக் குழுவில் தீர்மானம் போடவில்லை என்பதும் , இவரின் சிந்தனை நிறம் காவியோ என சிந்திக்க தோன்றுகிறது!

யாருக்கு ஆதரவு என பொதுக்குழு முடிவு செய்யும்   நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னும் பேரம் படியாத காரணத்தால் அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!  முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை சற்று உயர்த்தி வழங்கி, ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் லீக்கை வைத்து முஸ்லிம் வாக்குகளை பார்த்து கொள்ளலாம் என கருணாநிதி நினைத்து விட்டாரோ என்னவோ! திருக்குவளையாருக்கு திருவிடசெரி கொலை ஞாபகம் வந்து, எதற்கு  இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் என நினைத்து விட்டார் போலும்! ம.ம.க.வை வெளியேற்ற சொல்லி ஜெயலலிதாவுக்கு அனுப்பிய தூதும் பயனிள்ளதாதல்  கடைசி நேரத்தில் வேறு வழியின்றி எடுத்ததுதான் அவர்கள் இணைய தளத்தில் வெளியான நீங்கள் மேலே  காணும் தேர்தல் நிலைப்பாட்டு தீர்மானம். 


.

0 comments:

Post a Comment