Monday, January 17, 2011

மதுரை சொத்து -பி.ஜே.வின் பித்தலாட்டம்!


  • மதுரை சொத்து -பி.ஜே.வின் பித்தலாட்டம்!

 மதுரையை சேர்ந்த சகோதரர் ஒருவர் தனக்கு சொந்தமான சுமார் முப்பது சென்ட் நிலத்தை ஜமாஅதிற்காக தானமாக வழங்கினார்! இந்த சொத்து பி.ஜே பெயரில் எழுதிக் கொடுக்கப்பட்டு உள்ளதாக  நாம் பிரிந்த நேரத்தில் அறிந்த போது, ஜமாஅதிற்காக தரப்பட்ட சொத்து ஏன் பி.ஜே. பெயரில் இருக்க வேண்டும் எனக் கேட்ட போது ,சம்பந்தப் பட்டவர் பி.ஜே பெயரில்தான் எழுதித் தருவேன் என  சொன்னதால் அவர் பெயரில் எழுதி வாங்கினோம் எனக் கூறினார்.

  • தனக்கு பிரியமான சொத்தை அல்லாஹ்வின் வழியில் செலவிட வேண்டும் என அபு தல்ஹா [ரலி] தனது பைருகா தோட்டத்தை  கொடுத்த போது  நபி [ஸல்] மறுத்து அதை உரிய முறையில் செலவிட சொன்ன ஹதீஸ் பி.ஜே.வுக்கு தெரியதா? 
  • அதன் படி அதை தான் பெயரில் எழுதுவதை விட 'ஜமாஅத் பெயரில் கொடுத்தால் வாங்குவேன் இல்லையென்றால் நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு வழங்கி விடுங்கள்' ! என கூறியிருக்க வேண்டாமா? 

  • அவர் எனக்குத்தான் தருவேன் என்றார் என்று கூறுகிறீர்களே! ' இது ஜகாத்திற்கு வந்தது! இது எனக்கு தந்தது!  என ஒரு நபிதோழர் சொன்னதும் ' கூட்டு சபையை ! என மக்களை கூட்டி 'இது இவர் அம்மா வீட்டில் இருந்தால் வந்திருக்குமா? வாப்பா வீட்டில் இருந்தால் கிடைத்திருக்குமா? என நபி[ஸல் ] கோபமுற்ற நபி மொழியை பல மேடைகளில் முழங்கிய பி.ஜே. தொண்டியில் மளிகைக்கடை வைத்துக் கொண்டு இருந்தால் மதுரை சொத்து கிடைக்குமா? தவ்ஹீத் ஜமாத்திற்கு வந்ததால் தான் அது வந்தது என்பதை மறந்தது ஏன்?
  • சரி அப்படியே உங்கள் பெயருக்கு எழுதிக் கொடுத்தார் என்றாலும் , அது ஜமாத்திற்கு தரப்பட்ட 'பொது  சொத்தில்லையா?  ' பொது நிதியத்தின் [பைத்துல்மால் ] சொத்தான தங்கக் கட்டி தான் வீட்டில் உள்ளது! ஒரு வேளை தனக்கு ஏதேனும் நேர்ந்து தான் வீட்டார் அதை எடுத்து சொந்தமாக்கி கொண்டால் என்ன செய்வது? என அஞ்சி   நபி [ஸல் ]  தொழுகையில் இருந்து அவசரமாக வீட்டுக்கு விரைந்த அந்த நபி மொழியில் நமக்கு முன் மாதிரி இல்லையா ?
  • அடுத்தவன் ஜமாத்தையே தான் பெயரில் பதிவு செய்யும் பி.ஜே.குடும்பத்தார் நாளை பி.ஜே.வுக்கு பின் இந்த சொத்தை உரிமை கொண்டாட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
  • 'இல்லை ஏன் குடும்பத்தார்கள் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள்' என்று நீங்கள் கூறினால், ஜமாஅத் பொதுபணம் பற்றி  கேட்ட பொது  ஜாக் அமீர்  எஸ்.கமாலுதீன் மதனி 'எல்லாம் என் மனைவிக்கு தெரியும் நான் அவர்களிடம்  ஜமாஅத் சொத்துக்கள் பற்றி வசியத் செய்துள்ளேன் ' என கூறுகிறார் என்று அவரை கேசட் போட்டு கேவலப் படுத்தினீர்களே !  இது உங்களுக்கு பொருந்தாதா?
  • இதையெல்லாம் கேட்டதற்கு 'பத்திர செலவுக்கு பணமில்லை! இப்படி குற்றம் சுமத்துவோர் பணம் தந்தால் நாளையே பதிவு செய்கிறோம்! என பி.ஜே கேள்வி ஒன்றுக்கு பதில் சொன்னார் ! உண்மையிலேயே உங்களிடம் பணம் இல்லாததால்தான் பதிவு   செய்யவில்லையா?
  •   
  • அதன் பின் லட்சக் கணக்கில் செலவு செய்து அலுவலகத்தை குளிர் சாதன வசதியோடு . பன்னாட்டு கம்பெனி போல் அழகு படுத்தினீர்கள்,     கோடிக்கணக்கில் செலவு செய்து மாநாடு நடத்தினீர்கள் , இப்போது  லட்சக்கணக்கில் இ.த.ஜ. அபகரிப்பு வழக்குக்காக செலவிடுகிறீர்கள்!  பி.ஜே. பெயரில் உள்ள பத்திரத்தை ஜமாஅத் பெயரில் பதிவு செய்ய மட்டும் பணமில்லையா?
 
  • தற்போது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வக்கின்றி ' இல்லை அந்த சொத்து ஜமாஅத் பெயரில் தான் உள்ளது! என அந்தர் பல்டி அடித்து ஒரு  பொய்யை  மறைக்க பல பொய்யை சொல்லும் நிலை ஏன்?  

மதுரை சொத்தை தந்த சகோதரர் ஒரு கவரில் வைத்து தந்தாராம்! அதை  மதுரை நிர்வாகிகள் பிரித்து பார்க்காமல் அப்படியே 2008 ஜூன் மாதம் காமராஜர் அரங்க பொதுக்குழுவில் வைத்து பி.ஜே.விடம் தந்தார்களாம்  !  அதை பி.ஜே.வும் பிரித்து பார்க்காமல் , தற்போதய பொது செயலர் அப்துல் ஹமித் வசம் ஒப்படைத்தாராம் ! அவரும் பிரித்து பார்க்காமலே பல காலம் கழித்து பார்த்தாராம்! இதற்கிடையில் பத்திரப்பதிவுக்கு பணமில்லை என்பதை அறிந்த ஒரு மண்டலம் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததாம் !  அப்போது தான் அதை அப்துல் ஹமித் அந்த கவரை பிரித்து பார்த்தால் அதை கொடுத்தவர் பி.ஜே.பெயரில் எழுதாமல் ஜமாஅத் பெயரில் எழுதி இருப்பது தெரிந்ததாம்!  இந்த தற்போதுதான் இதை அப்துல் ஹமித் மறந்துதுட்டேன் அண்ணே !  என்று காட்டினாராம்! உடனே பி.ஜே.அதைக் கொண்டு வா! நெட்டில் போட!  என ஒரு இருபது ருபாய் ஹிபா எனும் தானப் பத்திரத்தை காட்டுகிறீர்களே! அல்லாஹ் என்னை காப்பாற்றி விட்டான்! என்கின்றீர்களே இது அபத்தமாக தெரியவில்லையா? மதுரை மல்லியை காதில் சுத்தலாம்! மதுரை சொத்தையே காதில் சுத்தலாமா?

  •  கூடுதல் பணம் கொடுத்தால் பழைய பத்திரம் யார் வேண்டுமானால் வாங்க முடியும்! இந்த இருபது ருபாய் பத்திரம் வாங்கத்தான் இரண்டு வருடம் பணமில்லாமல் காத்து இருந்தீங்களா ?

  • உங்களுக்கு தானமாக வந்த சொத்து பத்திரக்    கவரை பிரித்து பார்க்க இத்தனை   வருடமாகும் நீங்கள் ; மக்கள் பிரச்னை மற்ற அரசாங்க கடிதங்களை எல்லாம் எப்படி பார்ப்பீர்கள்?

  • கொடுத்த சொத்தின் பத்திரத்தையே பிரித்து  படித்துப் பார்க்காத இவர்கள் குரான் ஹதிசையும் இப்படித்தான் அணுகுவார்கள் என மக்கள் நினைக்க மாட்டர்களா?

  • பிரித்து பார்க்கமலேதான் பத்திர செலவுக்கு பணமில்லை என பஞ்ச பாட்டு பாடினீர்களா? மாட்டினால் மலேசியா ஜபருல்லாஹ் விடம்  பொய் சொல்லி கறந்தது போல் கறக்கலாம் என எண்ணினீர்களா ?

  • பார்க்காமலே நீங்கள் சொன்னதை நம்பி பத்திர செலவை  ஒப்புக்கொண்ட  வளைகுடா மண்டலம் நீங்கள் பொய் சொன்னது தெரிந்தால் மலேசியா ஜபருல்லாஹ் மாதிரி காறித் துப்பி கை விட மாட்டார்களா? 

  • காமராஜர் அரங்கத்தில் கையில் வாங்கியதை பிரித்து பார்க்காமல் , காசில்லாததால்தான் ஜமாத்தில் பதியவில்லை    என கற்பனையாக நானே நினைத்துக்கொண்டேன் ! எனக் கூற வெட்கமில்லையா ? இது தான் உங்கள் ஆய்வு  முறையா?
  
  • ஏற்கனவே துணை பொது செயலாளர் இக்பால் அரசிடம் இருந்து வந்த கடிதத்தை மறைத்து விட்டார் என்று பழி சுமத்தியது போல்  தற்போது அப்துல் ஹமித் மறந்து விட்டார் என  பழி போடுவது விரைவில் அவரை பலி கொடுக்கவா?

ஒரு பழைய இருபது ருபாய் பத்திரத்தை வாங்கி  அந்த சொத்தை இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு எழுதி தந்தது போல் காட்ட முடியும்! ஒரு பொய்யை மறைக்க இத்தனை பொய்களா? ஒரு இருபது ருபாய் பத்திரத்திற்குள் இவ்வளவு பெரிய பூசணிகாயை மறைக்க நினைக்கும் உங்கள் அறியாமையை நினைத்தால் உண்மையிலேயே வருத்தமாக உள்ளது!     நீங்கள் எந்தக் காலத்திலும் இவ்வளவு தடுமாறி பார்த்ததில்லயே அண்ணே ! நீங்கள் சொன்ன பழமொழி  மீண்டும் மீண்டும்   ஞாபகம்  வந்து தொலைக்கிறது  !  
 
கேடு வரும் பின்னே மதி கேட்டு விடும் முன்னே! 

இவண் -இப்னு ஹுசைன்.  
                

         
                

0 comments:

Post a Comment