Thursday, March 3, 2011

நேற்றைய இஸ்லாத்தின் எதிரி! இன்று இஸ்லாத்தின் தோழன்!


நேற்றைய இஸ்லாத்தின் எதிரி! இன்று இஸ்லாத்தின் தோழன்!


“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 :135)
மேலே உள்ள சத்திய வார்த்தையின்படி நேர்வழியினை அடையும் மார்க்கம் கிருஸ்தவம் என நம்பி தன் வாழ்வினை கழித்து வ்நத  சுவிட்சர்லாந்தின் டானியல் ஸ்ட்ரீக், அதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாத்திற்கு எதிரான அத்தனை காரியங்களிலும்  செய்துவந்தார். அந்நாட்டு முஸ்லிம்கள் வணங்க கட்டப்படும் மஸ்ஜித்களில் மினாராக்களை வைக்க விடாமல் தடுக்கும் எதிர்ப்பு பிராச்சாரத்தில் இவரும் இவர் தலைமையில் இயங்கிய சுவிஸ் மக்கள் கட்சியும் மும்முரமாக ஈடுப்பட்டது.  அப்படிப்பட்ட அவருக்கு,  அல்லாஹ் உண்மையான நேர்வழியினை எது என காட்டிவிட்டான். ஆம், அவர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றார்.
இவர்தான் எப்படி இஸ்லாத்தை ஏற்றேன் என்ற காரணத்தை நேரடியாக சுவிட்சர்லாந்து தொலைக்காட்சியில் கூறினார்.இஸ்லாத்தை ஏற்றமைக்கான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார்.
“Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,” அதாவது நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவரை பற்றி சுவிட்சர்லாந்து தொலை காட்சி இப்படி கூறியுள்ளதுHe was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது.
இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கபடுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு  3,11,000 என்று கூறுகின்றது இங்கு 100கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது .
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திற்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.

0 comments:

Post a Comment