Monday, March 28, 2011

கேடு கெட்ட தானம்தானே இது?


அன்பிற்குரிய இணையதள வாசகர்களுக்கு... 

தனிநபர் தக்லீது ஜமாத்தினர்..பொய் முகமூடி அணிந்து கொண்டு,கள்ளத்தனமாக நடத்திவரும் பொய்யன் டி.ஜே இணையதளத்தில்...மக்கள் ரிப்போர்ட்டில் வெளியான `காணவில்லை' என்கிற விளம்பர அறிவிப்பை பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள்.இவர்கள் எந்த அளவிற்கு கேவலமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு அந்த விளம்பரம் தொடர்பாக அவர்கள் எழுதி இருக்கும் செய்தியே சான்றாக உள்ளது.
"இந்தவார மக்கள் ரிப்போர்ட் இதழில் வந்திருக்கும் ஒரு விளம்பரம் இது. ஒருவர் காணமல் போய் விட்டார். அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர் என அதிலே குறிப்பிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக ஒரு சகோதரர் விளக்கம் கேட்டு இருந்தார். அதற்கு நம்முடைய விளக்கம் அவர் ததஜ வில் இருந்தவரை நல்லாத்தான் இருந்திருக்கார்.காணாமல் போகவில்லை. என்றைக்கு பொய்யன் கூட்டத்தில் சேர்ந்தாரோ அவருக்கு வந்தது வினை. அதன் விளைவு தான் இந்த காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு. அதனால் தான் அவர் ததஜவில் இருந்தவர் என்று போட்டுள்ளார்கள். பாவம் !!!

காணவில்லை என்கிற அந்த விளம்பரம் பஷீர் அஹ்மத் என்பவரால் கொடுக்கப்பட்டது என்பதை அந்த விளம்பர அறிவிப்பே தெளிவு படுத்துகிறது.இது போன்ற அறிவிப்புகளை இடப் பற்றாக்குறையின் காரணமாக பத்திரிகைகள் சிலவேளை  சுருக்கி வெளியிடுமே தவிர,அதில் எதையும் சேர்த்து வெளியிடும் மரபு எந்த பத்திரிகைக்கும் கிடையாது.இந்த அறிவு கூட இல்லாமல் பத்திரிகை நடத்துகிறார்கள்.காழ்ப்புணர்ச்சியை உமிழ்வதாகவே பொய்யன் இணையதளத்தின் எழுத்தை பார்க்க முடிகிறது...தனி நபர் ஜமாத்தின் பெயரை வேண்டுமென்றே நாம் சேர்த்து எழுதியதாக எண்ணிக்கொண்டு மக்கள் ரிபோர்ட்டை சொரிந்துள்ளனர்.
அடுத்து...காணாமல் போனவர் தனி நபர் தக்லீது ஜமாஅத்தில் இருந்தவர் என்று பஷீர் அஹ்மத் சுட்டிக்காட்டி இருப்பதற்கு காரணம்..காணாமல் போன அவரை தேடுவதற்கு எளிதான வழியாக இருக்கும்.அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்பதற்காகவே... என்று தான்  அறிவுள்ள எவரும் விளங்குவார்களே தவிர அந்த ஜமாத்தை குறை சொல்வதாக எவரும் கருத மாட்டார்கள்.  மேலும்.. காணாமல் போனவர் ,தமது எதிர் முகாமில் உறுப்பினராக இருந்தவர் என்று தெரிந்தும்,அந்த அமைப்பின் பெயரை தவிர்க்காமல்,காணாமல் போனவர் கிடைத்து விட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை கொச்சைப்படுத்தி எழுதும் இவர்களின் சிந்தனையை என்னவென்பது?கேடு கெட்ட தானம்தானே இது? 

சரி, நாம் இன்னொன்றை கேட்கிறோம்...மக்கள் ரிப்போர்ட்டில் ஒரு மூலையில் இருந்த விளம்பரத்தை எடுத்துக் காட்டும் இவர்கள்...அதே மக்கள் ரிபோர்டில் முன்பு.... சென்னை கமிஷனருக்கு இவர்கள் எழுதிய அவதூறு,பொய் புகார் குறித்தும்,இவர்களது சமுதாய துரோகம் குறித்தும் ஆதாரங்களுடன் ஒரு பக்க அளவிற்கு எழுதப்பட்ட செய்திகளுக்கு இதுவரை பதில் சொல்லாமல் மெளனமாக இருப்பது ஏன்? மக்கள் ரிப்போர்ட்டில் வெளியான அந்த செய்திகள் எல்லாம் உண்மை என்பதால்,இதற்கு பதில் என்று ஏதேனும் உளறினால் நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்கிற பயம்,பீதி தானே?
 
ஏற்கனவே மதுரை ஆதீனம் விஷயத்தில் நாக் அவுட் பஞ்ச் வாங்கிக்கொண்டு ஓடிய இவர்கள் மீண்டும் மக்கள் ரிபோர்ட்டை சீண்டி இருப்பது மீண்டும் வாங்கிக்கட்டிக்கொள்ளத் தான்!
 
 

 
  

0 comments:

Post a Comment