Friday, March 18, 2011

அண்ணன் ஜமாஅத்தில் அரபு நாட்டுக்கு தனி பைலாவோ?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

குவைத் மேலாண்மை மீது 'கை' வைக்க தனக்கு திராணி இல்லை என்று பீஜே காட்டி இன்றோடு 153  நாட்கள் கடந்தும், இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுன விரதம் பூண்டுள்ள பீஜே, குறைந்த பட்சம் ததஜவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது பற்றி விளக்கக் கூட திராணியின்றி, தனது ரசிகர்கள் மூலமாக கள்ள பிளாக்கில் புலம்பி வரும் நிலையில், பொய்யன் பீஜே  ஆசி பெற்ற 'பொய்யன் தளம்',

''மேலாண்மை மீது ஐந்து மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்து விட்டோம் என்றும்,  மேலாண்மை தானாக முன்வந்து ராஜினாமா செய்தார் என்றும் முன்னுக்குப் பின் முரணாக உளறி, புளுகியதை, அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்தும், அபகரிக்கப்பட்ட வார இதழில் இருந்தும்  காட்டச்சொன்னபோது பதிலில்லை.

 
பின்பு  'ஏறத்தாழ' என்று எட்டடி பள்ளத்தில் விழுந்ததை  மறந்து,  போலீஸ்- கொலைகாரன் கதை சொல்லி, 'அதுதான் இது' என்று வாழைப்பழ காமெடி செய்தது  பொய்யன் கூட்டம்.
 
தக்லீத் ஜமாத்தின் பைலாவை மேற்கோள் காட்டி, மேலாண்மையை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காதது ஏன்? என நாம் கேட்டபோது, ''பாக்கரை நாங்கள் பதவியை விட்டு மட்டும் தானே நீக்கினோம்; அப்போது அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காதது ஏன் என இவர்கள் கேட்டார்களா என்று நம்மை நோக்கி இந்த பொய்யனின் தம்பிகள் கேட்டபோது, ''பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்காக அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க வகை செய்யும் ஷரத்தை பைலாவில் இருந்து காட்டுங்கள் என்றபோது இந்த பொய்யன் கூட்டம் வாய் மூடிக் கொண்டது.
 
அடுத்து அந்த மேலாண்மை விஷயத்தை ஏனய்யா  பகிரங்கமாக அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும், அபகரிக்கப்பட்ட வார இதழிலும் வெளியிடவில்லை என்று நாம்  கேட்டபோது, 'அவர் ஜமாஅத்திற்கு எதிராக செயல்படாதவரை நாங்கள் பகிரங்கப் படுத்துவதில்லை  என்பது எங்கள் கொள்கை என்று உளறியது இந்த பொய்யன் கூட்டம். 
அப்படியானால்,  பாக்கர் பொதுச்செயலாளர் பதவிலிருந்து [இவர்களின் வார இதழ் அறிவிப்புப்படி] விலகியதை, அவர் ஜமாத்திற்கு எதிராக செயல்படாத  நிலையிலும் அதை மட்டும்  அபகரிக்கப்பட்ட  வார இதழில் பகிரங்கப் படுத்தியது ஏன் என இந்த பொய்யன் கும்பல் சொல்லுமா? என்று நாம் கேட்டோம்.
 
இதற்கு இப்போது புதுக்கதை சொல்கிறது இந்த பொய்யன் பீஜே கூட்டம். அதாவது ''குவைத் நடைமுறையில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டும் தான் பேப்பரில் போடுவது என்பது நெடுங்காலமாக பின்பற்றிவரும் நடைமுறையாகும்''என்கிறது.
தக்லீத் ஜமாத்தின் பைலா பிரகாரம் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட  வேண்டியவரை நீக்காததோடு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினால் மட்டுமே பேப்பரில் போடுவோம் என்று சப்பைக் கட்டு கட்டுகிறது பொய்யன் கூட்டம். தமிழ்நாட்டுல பதவியை  ராஜினாமா செஞ்ச ஒருத்தர் செய்தியை  பேப்பர்ல  போடுவார்களாம்! அதிகாரப் பூர்வ நெட்டில போடுவார்களாம்! ஆனா எண்ணெய் வயல் விசயத்துக்கு மட்டும் தனி சட்டமாம்! அப்படியானால் அண்ணன் ஜமாஅத்தில் அரபு நாட்டுக்கு தனி பைலாவோ?
 
எனவே இப்போதும் சொல்கிறோம். பீஜேவுக்கு திராணியிருந்தால் இப்போதாவது அந்த மேலாண்மையை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கி அதை பகிரங்கமாக அறிவிக்கட்டும். அவரை பாராட்டுவோம். திரும்ப இந்த பிரச்சினை குறித்து அவரை விமர்சிக்க மாட்டோம். அதைவிடுத்து திரும்பத்  திரும்ப கள்ள பிளாக்கில் உளறினால் தொடர்ந்து தோலுரிப்போம் இறைவன் நாடினால்.


--
3/18/2011 01:29:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment