Wednesday, March 23, 2011

ஒரு தேர்தல்; கண்ணித்தீவாக நீளும் தனிநபர் ஜமாஅத் ஆதரவு நிலைப்பாடு!


ஒரு தேர்தல்; கண்ணித்தீவாக நீளும் 

தனிநபர் ஜமாஅத் ஆதரவு நிலைப்பாடு!


தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு தனிநபர் ஜமாஅத்
ஒரு முடிவை எட்டமுடியாமலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பொதுக்குழு- செயற்குழு-இப்போது மீண்டும் பொதுக்குழு என 'கண்ணித்தீவாக' தனது ஆதரவு கதையை நீட்டிக்கொண்டே செல்கிறது.
 
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற்ற தனிநபர் ஜமாஅத் பொதுக்குழுவிற்கு முன்னால், தேர்தல் நிலைப்பாடு குறித்து சேலம் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார்கள். அவர்கள் சொன்ன  சேலம் பொதுக்குழுவும் கடந்த 30-01-11 ஞாயிறன்று சேலத்தில் கூடியது. அதில் தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியாமல்,
''தேர்தல் நெருக்கத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பதற்கு மாநில செய்ற்குழுவிற்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் வழங்குவதாக கூறி முடித்தனர்.
 
பின்னர் அவர்கள் சொன்ன செயற்குழுவும் கூடியது. அந்த செயற்குழுவிற்கு, 'தேர்தல் முடிவெடுக்கும் செயற்குழு' என்றே அறிவித்ததோடு, முடிவும் எடுத்ததாகவும் அறிவித்தனர்.
 
''தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில்முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.
 
முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
 
அதாவது 06..3.11 அன்று கூடிய செயற்குழு தேர்தல் ஆதரவு குறித்து முடிவுகள் எடுத்து விட்டதாகவும் அதை தக்க நேரத்தில் மாநில நிர்வாகம் அறிவிக்கும் என்று கூறிய இந்த தனிநபர் ஜமாஅத், அந்த செயற்குழு முடிவை அறிவிக்காமல் ஒரே அமுக்காக அமுக்கியது. அப்போதே மக்கள் மனதில் ஒரு சந்தேகம்! இந்த  செயற்குழுவுக்கு பெயர் 'அவசர செயற்குழு'.  அவசரமாக ஒரு விஷயத்தில் முடிவெடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டிய விஷயத்திற்குத் தான் அவசர செயற்குழுவோ பொதுக்குழுவோ  கூட்டப்படும். அதில் எட்டப்படும் முடிவும் உடனடியாக அறிவிக்கப்படும். இந்த நியதிக்கு மாற்றமாக, சாவகாசமாக அறிவிப்பதற்கு  எதற்கு அவசர செயற்குழு[?] என்ற சந்தேகத்திற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. அதாவது இந்த செயற்குழுவில் தேர்தல் ஆதரவு குறித்து முடிவெடுத்து விட்டதாகவும், அதை தக்க நேரத்தில் அறிவிப்போம்  என்றும் சொன்னது அப்பட்டமான அக்மார்க் பொய் என்பது  தெளிவாகி விட்டது. அதை கீழ்கண்ட தனிநபர் ஜமாஅத்தின் அவசர[?] பொதுக்குழு அறிவிப்பு உண்மைப்படுத்துகிறது.
''தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால்வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
என்று அழைப்பு விடுக்கிறது தனிநபர் ஜமாஅத்.
 06..3.11 செயற்குழுவில் முடிவுகள் எடுத்ததாக கூறியது பொய்தானே!
அது உண்மை எனில் அந்த செயற்குழுவில் எடுத்த முடிவை மாநில நிர்வாகம் அறிவிக்க வேண்டியது தானே!
செயற்குழு முடிவை அறிவிக்காமல்  இன்னொரு அவசர பொதுக்குழு எதற்கு?
இந்த பொதுக்குழுவில்  'முடிவெடுக்கப் போவதாக' கூறுவதன் மூலம் ஏற்கனவே செயற்குழுவில் முடிவெடுத்தோம் என்று சொன்னதை பொய் என இந்த பொய்யர் பீஜே ஜமாஅத் ஒத்துக் கொள்கிறதா?  
நாங்கள் அந்த செயற்குழுவில்  முடிவெடுக்கவில்லை; முடிவை பொதுக்குழு தீர்மானிக்கும் என்று தான் முடித்தோம் என்றால் அதை அறிவிக்காதது ஏன்?
சப்பைக் கட்டு கட்டாமல் பதிலளிப்பார்களா தனிநபர்வாதிகள்?

0 comments:

Post a Comment