Monday, March 28, 2011

மலேசியாவுக்கு வருமாறு பினாங்கு துணை முதல்வர் பாக்கருக்கு அழைப்பு.

மலேசியாவுக்கு வருமாறு பினாங்கு துணை முதல்வர் பாக்கருக்கு அழைப்பு.

உலகத் தமிழர் கூட்டமைப்பு குழுமத்தின் சார்பில்`கல்வியுடன் பொருளாதாரத் தமிழர்களாய் எழுவோம்' என்கிற கருப்பொருளோடு உலகத் தமிழர் இரண்டாவது பாதுகப்பு மாநாடு மலேசியா சிலாங்கூர் நகரத்திலுள்ள கொம்ப்ளெக்ஸ் முஹிபாஹ் என்ற இடத்தில் எதிர் வரும் மே மாதம் 17-18 தேதிகளில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில்  உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் பெருந்திரளாக பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில்..கடந்த வாரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த  மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பொன் ரங்கன்,மாநாட்டின் நிதிக்குழு தலைவர் கலையரசு கலிய  பெருமாள்,தமிழகப் பொறுப்பாளர் தோழர்.குருமூர்த்தி ஆகியோர் ஐ.என்.டி.ஜே தலைவர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்தனர்.அப்போது, "உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் எஸ்.எம். பாக்கர் கலந்து கொள்ளவேண்டும் " என பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர்.ராமசாமி அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறிய அவர்கள் அதற்கான அழைபிதழையும் கொடுத்தனர்.

இச்சந்திப்பின்போது மாநாட்டு பொறுப்பாளர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் வழங்கப்பட்டது.திருக்குர்ஆன் தமிழாக்கத்தை பெற்றுக்கொண்ட கலையரசு கலிய பெருமாள்,"திருக்குர்ஆன் தமிழ் மொழியில் இருக்கிறதா?" எனக் கேட்டது தாவா பணியில் மலேசியத் தமிழ் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியத் தேவை அதிகமாக இருக்கிறது என்ற என்னத்தை நமக்கு ஏற்படுத்தியது.

கடந்த வருடம் கோவை மாநகரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் உலகத்தமிழர் பாதுகாப்பு முதல் மாநாடு நடைபெற்றது குறிபிடத்தக்கது.

மாநாட்டுக் குழுவினர் அனைவரும் மாமறை குரானுடன் 





0 comments:

Post a Comment