Thursday, March 17, 2011

இதஜ போராட்டத்தால் வாணியம்பாடியில் மதுக் கடை மூடல்!


 இதஜ போராட்டத்தால் வாணியம்பாடியில் மதுக் கடை மூடல்!இதஜ போராட்டத்தால் வாணியம்பாடியில் மதுக் கடை மூடல்!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நேத்தாஜி நகரில் பொது மக்கள்  செல்லும் ஆலம் காயம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடையினால் கடுமையான துயரங்களுக்கு பொது மக்கள் ஆளாகினர். 
இக்கடையை கடந்துதான் இந்து மக்கள், மாரி அம்மன் கோயிலுக்கும், பள்ளி சிறுவர்கள் பாடம் படிக்க நயா மதரஸா என்ற பாடசாலைக்கும், முஸ்லிம் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கும், கிருஸ்துவ சகோதரர்கள் சர்ச்க்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.  
தினந்தோறும் குடித்து விட்டு கும்மாளம் போடுவதும், மிக அசிங்கமாக நடந்து கொள்ளும் குடி மகன்களை கண்டித்தும், இந்த கடையை  இந்த இடத்திலிருந்து மாற்றக் கோரி அரசு அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் எவ்வித பயனும் அற்று போயின. 
கடந்த 6 மாதத்திற்கு முன்பு எல்லா கட்சிகளும் சேர்ந்து கண்டன ஆர்ப்பட்டாம் நடத்தியது. அப்போதும் இக்கடையில் வியாபாரம் படு ஜோராக நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் கண் துடைப்பு ஆர்ப்பாட்டமாக மாறியது.
வெறுத்து போன பொது மக்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வாணியாம்பாடி நகர நிர்வாகிகள் வரும் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடையை முற்றுகை இட போவதாக அறிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த அரசு அதிகாரிகள், வியாழன் இரவு இதஜ நிர்வாகிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்தனர்.
கடையை ஒடுக்குவதற்கு முதலில் 15 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஒருபோதும் முடியாது என பிடிவாதம் பிடித்தத்தும் 5 நாட்களாவது அவகாசம் தர வேண்டும் என்றனர். நடக்கவே நடக்காது. உடனே மூடி ஆக வேண்டும் என்று கடுமையான முறையில் நின்றதும், தயவு செய்து இரண்டே இரண்டு நாட்களாவது தாருங்கள். கடையில் உள்ளே இருக்கும் சரக்குகளை விற்று விட்டு மூடி விடுகிறோம் என்று மிகவும் வேண்டினர். 
ஆனாலும், கடை இனி திறக்கக்கூடாது. வேறு இடம் பார்த்து விட்டு, சாமான்களை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என அசைந்து கொடுக்காமல் நம் நிர்வாகிகள் பேசியதும். வேறு வழி இன்றி மாவட்ட தாசில்தார் அலுவலக அதிகாரிகள் பணிந்து, கடையை பூட்டி சீல் வைத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்விற்கே எல்லா புகழும். முற்றுகை போராட்டத்திற்காக தலைமை ஏற்க வந்த மாநில பொருளாளர் அபூபக்கர் அவர்கள், சமூக தீமை குறித்து பயான் செய்தார். மாவட்டத்  தலைவர் அத்தீக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 
இக்கடையின் மூலம் கடும் அவதிக்கு ஆளாயிருந்த மக்கள் நேற்று (11.03.2011) நடைபெற்ற இதஜவின் சாத்வீக போராட்டத்தால் சந்தோஷம் அடைந்தனர். அவர்களின் வீரியப் போராட்டத்தை பாராட்டினர்.
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் - 5:2)
-அம்ம ஜுஹைப்.

0 comments:

Post a Comment