Monday, March 14, 2011

ஓடிப்போன பீஜேயும், அறுந்து போல பல்லி வாலாக வாலாக துடிக்கும் பொய்யர்களும்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

குவைத் மேலாண்மை மீது 'கை' வைக்க தனக்கு திராணி இல்லை என்று பீஜே காட்டி இன்றோடு 149  நாட்கள் கடந்ததோடு, இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுன விரதம் பூண்டுள்ள நிலையில், அருந்த பல்லியின் வாலாக வந்து புலம்பித்தள்ளுகிறது பொய்யனின் ஆசி பெற்ற 'பொய்யன் தளம்'.

தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக உளறித் தள்ளி தொடர்ந்து கேவலப்படும் இந்த பொய்யன் தளம், 'செமத்தியாக வாங்கிக்கட்டி விட்டு அதை மறைத்து வெற்றி- வெற்றி என கோஷமிட்டு செல்லும் ஒரு காமெடியனின் நிலையை ஒத்திருக்கிறது இந்த பொய்யனின் அடிப்பொடிகளின் நிலை.

  1. மேலாண்மை மீது ஐந்து மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று புளுகியதை, அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்தும், அபகரிக்கப்பட்ட வார இதழில் இருந்தும்  காட்டச்சொன்னபோது பதிலில்லை.
  2. நாங்கள் ஐந்து மாதம் என்று உறுதியாக சொல்லவில்லை. 'ஏறத்தாழ' என்று அனுமானமாகத் தான் சொன்னோம் என்று இந்த பொய்யன்தளம் பல்டியடித்தபோது, ஒருவரை எந்த தேதியில்  நீக்கினோம் என்றே உறுதியாக தெரியாத இவர்கள், நீக்கினோம் என்று சொல்வது வடிகட்டிய பொய் என்றோம். அப்போதாவது மேலாண்மையை  நீக்கியதை அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்தும், அபகரிக்கப்பட்ட வார இதழில் இருந்தும்  காட்டி நிரூபிக்க முடியாமல் மண்ணைக் கவ்வினார்கள்.
  3. மேலாண்மையை நீக்கிவிட்டோம் என்று தாங்கள்  சொன்ன பொய்யை மறந்து, மேலாண்மை தானாக முன்வந்து ராஜினாமா செய்தார் என்று முன்னுக்குப் பின் முரணாக உளறி, தங்களை தாங்களே பொய்யரின் கொள்கை வாரிசுகள் என காட்டினார்கள்.  
  4. ஒருவர் நீக்கப்பட்டார் என்றும், தானாக முன்வந்து விலகினார் என்றும் கூறுவது முரண்பாடில்லையா என்று கேட்டால், போலீஸ்- கொலைகாரன் கதை சொல்லி, 'அதுதான் இது' என்று வாழைப்பழ காமெடி சொல்கிறது பொய்யன் கூட்டம்.
  5. தக்லீத் ஜமாத்தின் பைலாவை மேற்கோள் காட்டி, மேலாண்மையை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காதது ஏன் என கேட்டபோது, பைலாவில் அப்படி ஒரு விதி இல்லை என்று கூற திராணியும் இல்லாமல், மேலாண்மை அடிப்படை உறுப்பினரிலிருந்து  நீக்கவும் திராணியில்லாமல், பாக்கரை நாங்கள் பதவியை விட்டு மட்டும் தானே நீக்கினோம்; அப்போது அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காதது ஏன் என இவர்கள் கேட்டார்களா என்று நம்மை நோக்கி இந்த பொய்யனின் தம்பிகள் கேட்டபோது, ''பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்காக அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க வகை செய்யும் ஷரத்தை பைலாவில் இருந்து காட்டுங்கள் என்றபோது இந்த பொய்யன் கூட்டம் வாயில் ஐஸ் குச்சியை வைத்துக் கொண்டது.
இவ்வாறு தொடர்ந்து ஒரு பொய்யை மறைக்க ஒன்பதாயிரம் பொய் சொல்லி வரும் இந்த பொய்யனின் தம்பிகள், இப்போது போலீஸ்-கொலைகாரன் கதை சொல்லியுள்ளார்கள். ''ஒரு கொலைகாரன் போலீசில் சரணடைந்தாலும் அவன் மீது கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தோம் என்றுதான் போலீஸ் சொல்லும் என்று உதாரணம் சொல்லி, அந்த மேலாண்மை தானாக முன் வந்து விலகினாலும், நாங்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்தோம் என்றுதான் போலீஸ் பாணியில் நாக்கூசாமல் பொய் சொல்வோம் என்று இந்த  பொய்யன் கூட்டம் ஒத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த மேலாண்மை மீது நடவடிக்கை  எடுக்கவில்லை  என்பதை இந்த  பொய்யன் கூட்டம் அழுத்தம் திருத்தமாக ஒத்துக் கொண்டுள்ளதை அறிவுடையவர்கள் அவதானிப்பார்கள்.

அதுமட்டுமன்றி அவர்களை அறியாமல் இன்னொரு உண்மையையும்  நமக்கு சொல்லியுள்ளார்கள். இந்த மேலாண்மை விஷயத்தில் நாங்கள் 'கமுக்கமாக' நடந்துகொள்வது இன்று நேற்றல்ல. பாக்கர் பொதுச்செயலாளராக இருக்கும்போதும் அப்படித்தான் ஒரு மேலாண்மை விஷயத்தை ஒரே அமுக்காக அமுக்கினோம் என்று கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இவர்கள் எண்ணெய் வயல்  விஷயத்தில் காலம் காலமாக கரிசனமாக நடந்து வருபவர்கள் என்பதையும் அறிவுடையவர்களுக்கு அறியத் தருகிறோம்.

அடுத்து அந்த மேலாண்மை விஷயத்தை ஏனய்யா  பகிரங்கமாக அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும், அபகரிக்கப்பட்ட வார இதழிலும் வெளியிடவில்லை என்று நாம்  கேட்டபோது, 'அவர் ஜமாஅத்திற்கு எதிராக செயல்படாதவரை நாங்கள் பகிரங்கப் படுத்துவதில்லை  என்பது எங்கள் கொள்கை என்று உளறியுள்ளது இந்த பொய்யன் கூட்டம். நன்றாக சிந்திக்க வேண்டும் ஒரு நிர்வாகி  மீது அவரது தவறான செயலுக்காக நடவடிக்கை எடுத்தால், அதை பகிரங்கமாக அறிவித்தால் தானே அமைப்பிலுள்ள அடுத்தவன் அந்த தவறை செய்யமாட்டான். இவர்கள் அமுக்கிக் கொன்டால் என்ன தவறுக்காக நீக்கப் பட்டார் என்பதும், அவர் இப்போது பதவியில் இருக்கிறாரா இல்லையா என்பதும் அடுத்தவருக்குத் தெரியுமா?

மேலும், இவர்களின் இந்த அபாயகரமான கொள்கை இன்னொன்றையும் உணர்த்துகிறது. ஒருவர் ஒரு அயோக்கியத்தனத்தை   செய்து நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், அவன் இந்த பொய்யன் கூட்டத்திற்கு எதிராக திரும்பாதவரை, அதாவது பொய்யன் பீஜே கூட்டத்தின் உலக மகா அசிங்கங்களை கண்டு கொள்ளாதவரை, இந்த பொய்யன் பீஜே கூட்டம் அந்த அயோக்கியனை காபந்து செய்யுமாம். நல்ல கொள்கையப்பா!

அடுத்து நீக்கப்பட்ட ஒருவன் ஜமாத்திற்கு அதாவது இந்த பொய்யன் பீஜே கும்பலுக்கு எதிராக திரும்பாதவரை அவன் மீதான நடவடிக்கையை பகிரங்கப் படுத்தமாட்டோம் என்ற இவர்களின் இந்த வாக்கானது உண்மையா என்றால் அதுவும் பொய். பாக்கர் பொதுச்செயலாளர் பதவிலிருந்து [இவர்களின் வார இதழ் அறிவிப்புப்படி] விலகியதை, அவர் ஜமாத்திற்கு எதிராக செயல்படாத  நிலையிலும் அதை மட்டும்  அபகரிக்கப்பட்ட  வார இதழில் பகிரங்கப் படுத்தியது ஏன் என இந்த பொய்யன் கும்பல் சொல்லுமா?

எனவே இப்போதும் சொல்கிறோம். பீஜேவுக்கு திராணியிருந்தால் இப்போதாவது அந்த மேலாண்மையை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கி அதை பகிரங்கமாக அறிவிக்கட்டும். அவரை பாராட்டுவோம். அதைவிடுத்து திரும்பத்  திரும்ப தனது சிஷ்ய கோடிகளுக்கு சாவி கொடுத்து தில்லாலங்கடி வேலை காட்டினால், எத்தனை  ஆண்டுகள் ஆனாலும் இப்பிரச்சினையை விட்டு விட  மாட்டோம் என்பதை பீஜே தனது நெஞ்சில் பதியவைத்துக் கொள்ளட்டும்.
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment