Thursday, March 3, 2011

ஆக்கிரமிப்பாளர்களால் அனாதையான 400 வருட பள்ளிவாசல்! .







ஆக்கிரமிப்பாளர்களால் அனாதையான 400 வருட  பள்ளிவாசல்!
 .
             பெர்ணம்பட்  அருகில்  உள்ள  சத்காடி  கிராமத்தில்  400 ஆண்டு  பழமை  வாய்ந்த  ஜும்மா  பள்ளிவாசல்  தற்போது  பராமரிபற்று  அனாதையான  நிலையில்  உள்ளது . வகப்  வாரியமும்  பள்ளி  நிர்வாகமும்  அதை  கண்டு  கொள்ளவில்லை . பள்ளிக்கு சொந்தமான வகப்  நிலங்களை   கயவர்கள்  முலம்  ஆக்கிரமிப்பு  செய்ய  பட்டுள்ளது . பள்ளியில்  1 வேளை  தொழுகை  கூட  நடை  பெறுவதில்லை . 

இதை  அறிந்த  intj பெர்ணம்பட்  நிர்வாகிகள் , சர்ப் ராஸ்   , பைசுர் ரஹ்மான் , ரபீக் ,அன்சர் ,இம்தியாஸ்   ,அப்துல்லா ,முஹம்மது ,பாரூக் , உள்ளிட்டோர்   அங்கு  சென்று  அங்குள்ள மக்களுக்கு குரான்  ஹதீஸ்  படி தாவா    செய்து  பூட்டப்பட்ட  பள்ளிவாசலில்  வெளியே  அசர் ,மக்ரிப்  தொழுகை  நடத்தியது . 

பள்ளி  நிர்வாகத்தின்  தவறான  நிலையால்  இந்த  நிலை  மற்றும்  பள்ளி  வாசலை    பூட்டும்  நிலை  ஏற்பட்டுள்ளது . வகப்  வாரியம்  தகுந்த  நடவடிக்கை  மற்றும்  பூட்டிய  பள்ளிவாசலில்  தொழுகை  நடத்தவும் ,வகப்  நிலங்களை  மீட்கவும்  intj தேசிய  நிர்வாகிகள்   s.m பாக்கர்   , முஹம்மது  மொஹிதீன்,இக்பால்  ஆகியோரின்  அறிவுரை  படி  வகப்  வாரியத்திடம்  முறையிட்டுள்ளது .வகப்  வாரியம்  நடைவடிக்கை  எடுக்குமா  பள்ளியை  மீட்குமா ? இல்லையெனில் இன்ஷா அல்லாஹ்   வேலூர் மாவட்ட இ.த.ஜ.பள்ளியை மீட்க மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அறிவிக்கும் ! 

0 comments:

Post a Comment