Wednesday, March 16, 2011

'ஹாமித்பக்ரியும்; பீஜேயின் முரண்பாடுகளும்! [பாகம்;3]


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
மவ்லவி ஹாமித்பக்ரி பற்றிய தொடரின் இரண்டாம் பாகத்திலும், மூன்றாம் பாகத்தின் முதல் பகுதியிலும், ஹாமித்பக்ரி பற்றி சில பண மோசடிகளை  குறிப்பிட்டுள்ளார் பீஜே. அவற்றை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னால், ஹாமித்பக்ரியின் தீவிரவாத தொடர்பு பற்றிய தகவல்கள் அவரது கைதுக்கு முன்பே தனக்கு தெரியும் என்று பல இடங்களில் தனது எழுத்தின் மூலம் கூறியுள்ளார்.
 
அதில் முதலாவது சம்பவமாக பீஜே குறிப்பிடுவது, ஹஜ்ஜுக்கு சென்ற ஹாமித்பக்ரி அங்கே மவ்லவி முஜிபுர்ரஹ்மான் உமரி  அவர்களின் அலுவலகத்தில் வைத்து  லஸ்கரே தய்யிபாவின் முக்கிய தலைவரை சந்தித்து பேசியதாகவும், குஜராத்  கலவரத்தை சொல்லி நாம் பாதுகாப்புப் படை அமைக்கவேண்டும்  என்றும் அதற்கு பெரும் நிதி தேவை  என்று தமிழ் சகோதரர்களிடம் பேசியதாகவும் பீஜெயிக்கு ஒரு தகவல் கிடைத்தததாம். ஹாமித்பக்ரி எந்த படையும் ஆரம்பிக்க மாட்டார் பணம் சம்பாதிக்க அடுத்த வழியை  தேர்ந்தெடுத்து விட்டார் என்று பீஜே கருதினாலும் , லஸ்கர் தலைவரை சந்தித்தது குறித்து பீஜே கவலை கொண்டாராம்.
 
இருந்தாலும் இதுபற்றி தமுமுக-அதஜ நிர்வாகிகளிடம் கூறாமல், ஹாமித் பக்ரி  சவூதியிலிருந்து வரட்டும். அவரிடம் தனிப்பட்ட  முறையில் விசாரித்து உறுதிப்படுத்திய பின் மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வோம் என்று அண்ணன் அமைதி  காத்தராம். [அட! ஆச்சர்யமாயிருக்கே!] . பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தாயகம் வந்த ஹாமித்பக்ரியே பீஜெயிக்கு போன் செய்து, அடியேன் உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும்; அனுமதி தாருங்கள் என்றாராம். அண்ணனும் இல்லம் வாருங்கள் என்றாராம். இல்லம் வந்த ஹாமித்பக்ரி 'உடனே பாதுகாப்பு  படை தொடங்கவேண்டும் என கூறினாராம். உடனே எவ்வித பதற்றமுமின்றி அண்ணனும் பாதுகாப்புப் படை கூடாது பக்ரிக்கு ஒருமணிநேரம்  பயான் பண்ணினாராம். பின்பு பக்ரி சென்றுவிட்டாராம்'.
 
இப்படி கதை எழுதுகிறார்  பீஜே. ஹாமித்பக்ரி லஸ்கர் தய்யிபா தலைவரை சவூதியில் சந்தித்தது எனக்கு கவலையளித்தது என்று கண்ணீர் வடித்த பீஜே, அதுபற்றி ஹாமித்பக்ரியிடம் வாய் திறக்காதது ஏன்? ஹாமித் பக்ரியிடம் கேட்பதை விட்டும் அண்ணனை  தடுத்தது  எது? ஹாமித்பக்ரி மீதான பயமா? அல்லது லஸ்கர் மீதான பயமா?
 
சரி! ஹாமித்பக்ரியிடம் கேட்கத்தான்  தெம்பில்லை. 'ஹாமித்பக்ரி தனது அலுவலகத்தில் வைத்து  லஸ்கர் தலைவரை சந்தித்தது  உண்மையே என்று மவ்லவி முஜிபுர்ரஹ்மான் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக பீஜே கூறுகிறாரே! அதற்கு பின்பாவது ஹாமித்பக்ரியின்  சட்டையை பிடித்து பீஜே கேட்காதது  ஏன்? சரி!பயங்கரவாத இயக்கம் என்று அறியப்பட்டிருக்கும் ஒரு இயக்கத்தின் தலைவரை ஹாமித்பக்ரி சந்தித்தது  உறுதியான பின்னும், தமுமுக-அதஜ நிர்வாகக் குழுவிலோ, அல்லது ஹாமித்பக்ரி அதஜ தலைவர் என்ற வகையில், இதுபற்றி அதஜ பொதுக்குழுவை  கூட்டி, ஹாமித்பக்ரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் ஜவாஹிருல்லாஹ்விடம் சொன்னேன்- ஹைதர்கிட்ட மட்டும் சொன்னேன் என்றெல்லாம் குறம்பாடுவது, பீஜேயின் கூற்றுப்படி  தீவிரவாத தலைவரை சந்தித்த ஹாமித்பக்ரிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்ததாக ஆகாதா? ஹாமித்பக்ரியை தலைவராக கொண்ட மக்களுக்கும்- ஜமாஅத்திற்கும் பீஜே செய்த துரோகமில்லையா இது.?
 
-சாட்டை தொடரந்து சுழலும் இன்ஷாஅல்லாஹ்.


--
2/27/2011 02:52:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment