Wednesday, March 16, 2011

எந்தக் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் வேட்பாளருக்கே முன்னுரிமை ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்,எம்,பாக்கர் விளக்கம்.


எந்தக் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் வேட்பாளருக்கே முன்னுரிமை !
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்,எம்,பாக்கர் விளக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்பிற்குரிய சகோதர முஸ்லிம்களுக்கு!
நேற்று நடை பெற்ற இ.த.ஜ. செயற் குழுவில் எடுக்கப் பட்ட முடிவுகளை பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கி பேட்டி அளித்த போது 'ஒட்டு மொத்தமாக காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்வோம்' எனக் கூறிய போது காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களையுமா? எனக் கேட்ட போது தவறுதலாக
'ஆம்' எனக் கூறி விட்டேன் ! பின்னர் 'முஸ்லிம்கள் எந்தக் கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் ஆதரவு' எனும் மாநில செயற் குழு முடிவுக்கு மாற்றமானது என சுட்டிக் காட்டப் பட்டு அது என்னுடைய தவறு என ஒப்புக் கொள்ளப்பட்டு சரி செய்யப் பட்டது! அது போன்று பாரதிய ஜனதா வேட்பாளர் முஸ்லிமாக இருந்தால்? என்ற கேள்வி எழுப்பப் படுகிறது முஸ்லிம்களின் எதிரியான பி.ஜே.பி.யில் போட்டிடுபவரை எப்படி நாம் முஸ்லிம் வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியும் ? இந்துத்வா வேட்பாளர்களை தவிர மற்ற அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் ஆதரவு, மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்பது தான் நமது முடிவாகும்!

இவண் எஸ்.எம்.பாக்கர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment