Sunday, March 6, 2011

பி .ஜே கூட இருக்கும் போது தெரிய வில்லையா?

                     பி .ஜே  கூட இருக்கும் போது தெரிய வில்லையா?

 கூட இருக்கும் போது தெரிய வில்லையா? இந்த கேள்வியை பல சகோதரர்கள் நாம் பி.ஜே.குறித்த விமர்சனங்களை வைக்கும் போதெல்லாம் வைக்கின்றனர்! நாமும் பல முறை இதற்க்கு விளக்கம் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் இதை கேட்கிறார்கள் ! விளங்காமல்  கேட்கிறார்களா? இல்லை வேண்டும் என்றே கேட்கிறார்களா? எனபது நமக்கு விளங்கவில்லை!

      நாம் இணையதளம் துவங்கிய போது இது போன்ற கேள்விகளுக்கு அளித்த பதில் காண கிளிக் செய்யவும் 

பி.ஜே.தொழுகையை பற்றி இப்போது சொல்லும் நீங்கள் அங்கிருக்கும் வரை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்கு தமுமுக பிரிவின் போது பீஜேவே பதில் சொல்லியிருக்கிறார். 

'உள்ளே இருந்து சொல்வதெற்கென்று ஒரு நிலை உள்ளது! அது முடியாத போது வெளியே வந்து சொல்லும் நிலை ஏற்படுகிறது' 

அதே  நிலைதான் நமக்கும்! நாம் நம்முடைய அளவிலே, நாம் பேசக் கூடிய தலைவர்களிடத்திலே சொல்லிகாட்டியிருக்கிறோம். இயக்க கட்டுப்பாடு கருதி வெளியில் பேச முடியாது! இப்போது அந்த கட்டுப்பாடு இல்லையென்பதால் வெளியே பேசுகிறோம்.
மேலும் இப்போது ஏன் சொல்கின்றீர்கள்? என்ற கேள்வியே தவறாகும். எப்போது சொன்னால் என்ன? தவறு என்று தெரிந்தால் சுட்டிக் காட்டலாமா கூடாதா? என்பதுதான் நமது கேள்வி! நாம் ஷிர்க் பித்அத்தில் இருந்தோம் தவறு எனத் தெரிந்த பின் ஷிர்க், பித்அத் பற்றி பேசினால் நீ ஏன் அப்போது பேசவில்லை என்ற கேள்வி சரியா? 

மவ்லீத் தவறு என்று சங்கரன் பந்தல் மதரஸôவில் பணியாற்றிய போது பேசத் தெரியவில்லையா? மவ்லீது ஓதிய நீங்கள் மவ்லீது பற்றி இப்போது பேசலாமா? என்று பீஜேவிடம் கேட்டால் அது அறிவுடைமையா? 

வரதட்சணை தவறு என்று இப்போது புரிந்து அதை வாங்கு பவரிடம் போய் சொன்னால், நீ வாங்கும் போது தெரியவில்லையா? என்பது போலத்தான் இதுவும்! பிரிந்த பின் பேசலாமா? என்ற கேள்விக்கு சத்தியம் தெரிந்த பின் பேசலாமா? கூடாதா? என்பது தான் பதிலாக இருக்க முடியும்
 [29.7.10 அன்று  நம் இணையதளத்தில்] ௦  



இப்படி பல முறை பதில் அளித்திருந்தும் மீண்டும் மீண்டும்  கேட்பது ஏன் என்று விளங்கவில்லை!

நாம் கூட இருக்கும் போது ஏற்றுக்கொண்ட ஒன்றை பிரிந்த பின் தவறு என்று புரிந்த போது மாற்றிக் கொள்வது அல்லது மாற்றுக் கருத்து கொள்வது மார்க்க அடிப்படையில் எப்படித் தவறாகும்?

அது தவறென்றால் அவர்கள் பலவருடம் பின் பற்றி வந்ததை பி.ஜே.வின் அறிவுப்படி அல்லது ஆய்வுப்படி    தவறு என
 தெரிந்ததும் மாற்றிக் கொண்டார்களா? இல்லையா?

உதாரணதிற்கு  ; 
  1. நோன்பு திறக்கும் போது தஹபள்ளமவு துவாவை மாற்றி பிஸ்மில்லாஹ் சொன்னால் போதுமானது என்றது!
  2. தற்போது பசியோடிருக்கும் போது துவா கூடாது! எனக் கூறி ஏற்றுக்கொள்ளப்படும் துவாக்களில் ஒன்றான நோன்பு திறக்கும் நேர துவாவை மறுப்பது!
  3. ஆதாரப்பூர்வமான ஹதிஸ்கள் குரானுக்கு முரண் படாது ! ஒரு வஹி இன்னொரு வஹியோடு மோதாது! எனக் கூறி விட்டு தற்போது 50 கும் மேற்பட்ட ஹதிஸ்கள் குரானோடு மோதுவதால் ஏற்றுக்கொள்ள முடியாது என தன்னுடைய அறிவை மட்டும் கொண்டு குரான் ஹதிஸை அளக்க முயல்வது!
  4. 20 வருடங்களுக்கு மேல் ருகுஹ் இல் இருந்து எழும் போது சொன்ன 'ரப்பனா லகல்  ஹம்து  , ஹம்தன் கசீரன் தய்யிபன் முபாரக்கன் பிஹி' எனக் கூறியதை தற்போது தவறு எனக் கூறுவது!
  5. பொருட்களை தூய்மை படுத்தவே ஜகாத் எனக் கூறி விட்டு பின்னர்  மனிதரை தூய்மை படுத்தவே என ஒப்புக் கொண்டது!
  6. பல வருடம் கணிப்பின் மூலம் தொழுத கிரகண தொழுகையை கண்ணால் பார்த்தால்தான்  இனி கிரகண தொழுகை என மாற்றியது!
  7. மாவ்ட்டப்பிறை, மண்டலப் பிறை , தத்தம்  பகுதிப் பிறை தற்போது தமிழகப் பிறை என வருடா வருடம் நிலையை மாற்றிக்  கொண்டது! 
  8. மார்கத்தை எந்த மேடையிலும்  சொல்லலாம் என்ற நிலையிலிருந்து மாறி பின்னர் பிறர் மேடையில் நாங்கள் ஏற மாட்டோம் ! என நிலை எடுத்தது!
  9. எங்கள் மேடையில் பிறரை ஏற்ற மாட்டோம் என ஜூலை 3 வரை முழங்கி விட்டு ஜூலை 4 ல் பிரதமரின் சந்திப்பிற்காக ஜே.எம்.ஹாருணை மேடை ஏற்றி அவர் மேடையிலே தன்னை தர்காவாதி எனக் கூறியது!
  10. ஆரம்ப காலத்தில் தேர்தல் அரசியலில் கருத்து சொல்ல மாட்டோம் ! என கூறி விட்டு பின்னர் அவர்களுக்காக தெருத் தெருவாக பிரசாரம் செய்து கொண்டிருப்பது! 
  11. ஆரம்பத்தில் பெண்கள் கல்வி கற்க வேண்டும என பேசி விட்டு  தற்போது பெண்களுக்கு   மேல் படிப்பு தேவையில்லை என கூறுவது!
  12. சிசுக்கொலையை இஸ்லாம் தடுக்கிறது எனக் கூறிவிட்டு தற்போது மூன்று மாதத்திற்கு பின்தான் குழந்தை எனவே அதற்க்குள்ளக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என கருவறையை கல்லறையாக்க சொல்வது!
இது போல் ஏரளமான விசயங்களில் பி.ஜே.முன்னர் சொல்லியதற்கு பின்னர் மாற்றமான முடிவை மேற்கொண்டுள்ளார். அந்த முடிவு சரியா தவறா? என்பது வேறு விஷயம்! ஆனால் அப்படி முடிவு எடுக்க அவருக்கு எப்படி உரிமை 
உள்ளதோ அதே போன்று எங்களுக்கு தவறு என தெரிந்த விசயங்களை விட்டு விலகிக் கொள்வதும் ,அதை மக்கள் மத்தியில் தவறு என விளக்குவதும் எப்படித் தவறாகும்?

தர்கா வழிபாட்டில் இருந்த நாம்   எப்படி அது தவறு என விளங்கி 
தற்போது எப்படி அதை எதிர்த்து பிரசாரம் செய்கிறோமோ, 

மார்கத்திற்கு முரணான பல வழிகேட்டில் இருந்த நாம் , இன்று 
அந்த வழிகேடுகளை எதிர்த்து எவ்வாறு பிரசாரம் செய்கிறோமோ,

மதஹபுகளை பின்பற்றி முன்னோர்களை தக்லீது செய்த நாம் ,இன்று அவற்றை எதிர்த்து பிரசாரம் செய்கிறமோ; 

அது போல் இன்றைக்கு அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டுவதும் குரான் ஹதிஸ் அடிப்படையில் அவற்றை உரசிப் பார்த்து விமர்சிப்பது எப்படி தவறாகும்!

அது குரான் ஹதிஸ் அடிப்படையில் இருக்கிறதா என்பதை பாருங்கள் ! அது இல்லாத பட்சத்தில் சுட்டிக் காட்டுங்கள் !
திருத்திக் கொள்கிறோம்!

அதை விடுத்து மற்ற இயக்கத் தலைவர்கள், அவ்லியாக்கள் , இமாம்கள் சஹாபாக்கள், நபிமார்கள் என அனைவரையும் விமர்சிக்கும் பி.ஜே. மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போலும், அவருடைய ஆய்வுகளுக்கு மேல் ஆய்வோ;அவரின் அறிவுக்கு மேல் அறிவோ இல்லை என்ற நிலையை உருவாக்கி அவரை வழி கெடுக்காதீர்கள்!                            

 செங்கிஸ் கான்.

0 comments:

Post a Comment