Wednesday, March 2, 2011

ஹாமித்பக்ரியும்; பீஜேயின் முரண்பாடுகளும்! [பாகம்;2]


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..  

மவ்லவி ஹாமித்பக்ரி அவர்கள் அதஜவுக்கு தலைவராக்கப்பட்டது  குறித்து இரண்டாவது தொடரில் ஆரம்பிக்கும் பீஜே,

'மிகப்பெரிய பொறுப்பு அவர்மீது மக்களால் சுமத்தப்பட்டது. அவரைவிட மூத்த தலைவர்கள் கூட அவர் மீது நன்னம்பிக்கை வைத்தனர். ஆனால் ஹாமித்பக்ரி அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களை படுகுழியில் தள்ளப்பார்த்தார். அல்லாஹ்வின் மறைமுகமான பேரருள் இல்லாவிட்டால், அவரது துரோகத்தால் பல சகோதரர்கள் சொல்லொணா துன்பத்தை அடைந்திருப்பார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் எனும் அமைப்பில் தம்மை இணைத்துக் கொள்ளும் மக்கள், இந்த ஜமாஅத் மார்க்கப் பிரச்சாரம் செய்யும். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் எந்த காரியத்தையும் செய்யும் என்று நம்பித்தான் இணைகிறார்கள். இவ்வாறு நம்பிய இயக்கத்தின் தலைவர்கள் வேறுவிதமான ரகசிய திட்டத்தை  வைத்திருந்து அதன் காரணமாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டால், அவர்கள் மட்டும் பாதிக்கப்பட்ட மாட்டார்கள். மாறாக, பட்டி தொட்டி எங்கும் இந்த ஜமாஅத்தில் பொறுப்பு வகிக்கும் அனைவரும் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள்.

அது மட்டுமின்றி தவ்ஹீத் பிரச்சாரம்  செய்வதற்கும்  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். தீவிரவாதிகள் என்று ஒரு இயக்கம் தக்க ஆதாரத்துடன் முத்திரை குத்தப்பட்டால், அதன் ஒட்டுமொத்த  செயல்பாடுகளும் முடக்கப்பட்டுவிடும். இனி ஒரு காலத்தில்  தவ்ஹீத் எனும் உயிர் மூச்சான கொள்கையை சொல்வதற்கு 
பல ஆண்டுகள் காத்திருக்க நேரிடும். வெளியே மக்களுக்கு சொல்வதற்கு  மாற்றமாக  தலைவர்கள்
ஹிட்டன் அஜெண்டா எனும்  மறைமுக  திட்டம் வைத்துக்கொள்வது அந்த  மக்களுக்கு செய்த துரோகமாகும். இது மன்னிக்க முடியாத  மாபெரும்  குற்றமாகும். இந்த துரோகத்தைத்தான் ஹாமித்பக்ரி  செய்து  ஏகத்துவ  இயக்கத்தை  குழிதோண்டி  புதைக்கும்  வகையில்  ரகசிய  திட்டங்களைத்
 தீட்டினார்.குஜராத்  கலவரம்  காரணமாக  முஸ்லிம்களிடம்  காணப்பட்ட  கொந்தளிப்பை  சாதகமாக்கிக்  கொண்டு,
 இயக்கத்தின்  கொள்கைக்கு  எதிரான  போக்கில்  பயணம்  செய்தார்.
 
இவ்வாறாக நீள்கிறது பீஜேயின் வாதங்கள். ஹாமித்பக்ரி தான் கொண்ட கொள்கைக்கும், தனது இயக்கத்தின் கொள்கைக்கும், தன்னை நம்பி வந்த மக்களின் எதிர்பார்ப்பிற்கும் மாற்றமாக, தீவிரவாத ரகசிய திட்டங்கள் தீட்டினார் என்று கூறும் பீஜே, இத்தகைய மாபாதக செயலை செய்த ஒருவரை கடைசிவரை நீக்காமல், கைது செய்யப்பட்ட பின்னும் நீக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் என்று பீஜே சொல்லவேண்டும். மேலும் ஹாமித்பக்ரியின் ரகசியதிட்டம் எனக்கு தெரியாது; ஹாமித்பக்ரி கைது செய்யப்பட்டபின் தினத்தந்தியில் படித்துத்தான் இத்தகைய செய்தி எனக்கு தெரியும் என்று பீஜே ஜகா வாங்கமுடியாது. ஏனெனில் ஹாமித்பக்ரி கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே அவரின் தீவிரவாத  தொடர்புகள்  எனக்குத் தெரியும்  என்று அடுத்தடுத்த தொடர்களில் பட்டியல் போட்டுள்ளார் பீஜே.
 
எனவே, பீஜேயின் கூற்றுப்படி ஹாமித்பக்ரி தான் கொண்ட இயக்கத்தின் கொள்கைக்கும், நம்பிய மக்களுக்கும் மாபாதக துரோகத்தை  செய்தது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ஹாமித்பக்ரியை  அவர் கைது செய்யப்படும்வரை அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும், அவர் கைது செய்யப்பட்ட பின்னால் கூட அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும், அவரைப் பற்றிய உண்மை நிலவரத்தை  நாம்  கிளப்பும்வரை மறைத்ததும் பீஜே மக்களுக்கு செய்த மாபாதக துரோகமில்லையா?
 
-சாட்டை தொடர்ந்து சுழலும் இன்ஷாஅல்லாஹ்.
 

0 comments:

Post a Comment