Monday, March 7, 2011

பகைமை தீயை பற்றவைக்கும் பிரிவினைவாதி பொய் ஜே....



                                             ஏக இறைவனின் திருப்பெயரால் ..

பகைமை தீயை பற்றவைக்கும்
                      பிரிவினைவாதி பொய் ஜே....
 
அடுத்தவர்களின் குறைகளை ஆராய்வைதையே பிரதான பணியாக இருப்பது மட்டுமிலாமல் தவ்ஹீத் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஊர் தோறும், தெருதோறும், ஏன் குடும்பம் தோறும் பிரிவினையை ஏற்படுத்திய பொய்  ஜே இப்போது சகோதரத்திற்கு மத்தியில் பகைமையை பற்றவைகிறார்.

அதுமட்டுமா சமூதயாதிற்கு  எதிராக களம் இறங்கி அதிரடி அவதூறுகளை பின்னி[?] எடுக்கிறார். சமீபத்தில் INTJ  மண்ணடியில் நடத்திய  ஒரு கூட்டத்தில், சகோதரர் செங்கிஸ் கான் மமக வின் தற்போதைய அரசியல் நிலைபாடு குறித்து பேசியதை அப்படியே உல்டா செய்து தனது கள்ள தள[ன]தில் பரவ விட்டு இருக்கிறார்
 

அவர்கள் [INTJ ]  பேசியது என்ன? 'மூன்று சீட் முஸ்லிம் சமுதாயத்திற்கும் உங்கள் அமைப்பின் சதவிகிதத்திற்கு உள்ளவர்களுக்கும்  போதாதே!  ஒன்று...நீங்கள் சமூதாய நலத்திற்கு தனித்து முடிவெடுத்தது தவறு,, அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றுகூட்டி அல்லது ஒத்த கருத்துள்ள சகோதர அமைப்புகளிடம் சமூதாயநலன் கருதி  ஆலோசனை செய்து இருந்தால் மூன்று என்னஅதற்க்கு  மேலும் கிடைத்திருக்கும் அல்லவா..அதை  விடுத்து ஆறுமாதத்திற்கு முன்பு அம்மையாரிடம் அடைக்கலம் அடைந்தது. தவறான தான் தோன்றித்தனமான போக்கு அல்லவா சமூக நலம் கருதி நீங்கள் மற்ற அமைப்புகளை  ஆலோசனை செய்யாதது ஏன்?' என்ற கருத்தை முன்  வைத்து அறிவுரை செய்தார்கள்.. இதை அந்த ம ம க வினரே தவறு என்று கருத மாட்டார்கள். [அதை தவறாக கருதாதால் தான் ம.ம.க. நிர்வாகிகள் இதற்க்கு பின்னர் இ.த.ஜ. தலைமையகம் வந்தனர் ] ஆனால் அண்ணன் இதை அப்படியே கதையை மாற்றி சகோதரர்கள் மத்தியில் பகைமை திரியை ஏற்றி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள் அண்ணனின் எண்ணம் எப்படி பட்டது என்று?

ம ம க வினருக்கு மூன்று சீட் குறைவுதான் என்றாலும் அது முஸ்லிம் சமூதயதிர்க்கு போதாது என்றாலும் அவர்கள் சொந்த சின்னதில் போட்டி இடுவதன் மூலம் தங்களுடைய சுயமரியாதையை காப்பாற்றி கொண்டார்கள்! என்பதை எண்ணும்  போது ஒருபுறம் திருப்பதி அளிக்கிறது [பரவாஇல்லை ] எனலாம் ... இருப்பினும் ம ம க வின் இந்த முந்திரி கொட்டை தனமான மூன்று சீட்  [அரசியல்]  போக்கு  வரும் காலங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.
  

அடித்தாலும் அனைத்தாலும் நாங்கள் அண்ணன் தம்பிகள் தாம் என்பதை அண்ணன் மறந்து விட்டார் போலும்,அதனால் தான்  ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக அண்ணன் தன்னுடைய கள்ளத[ள]னதில் கைவரிசை செய்து  இருக்கிறார்! மன்னடி கூட்டத்தை காரணமாக காட்டி சகோதரர்கள் மத்தியில் பகைமை தீ மூட்டி அதன் மூலம் குளிர் காயலாம்  என்று நினைக்கிறார்..
 

தனக்கு ஒருவர் மீது கருத்து வேறுபாடு இருந்தால் அதை அழகிய  முறையில் சுட்டி காட்டலாம் அதற்காக சமூதாயத்தை பின்னுக்கு தள்ளும் அல்லது காட்டி கொடுக்கும் வேலையை செய்யலாமா? ஆனால் அதை கன கட்சிதமாக நம்ம அண்ணே [பொய் ஜே] செய்துவருகிறார்.

மனிதர்கள் என்ற ரீதியில் குறைநிறைகள் இருக்கத்தான் செய்யும்.நிறைகளை முன் நிறுத்தி குறைகளை அழகான முறையில் சுட்டி காட்டி திருத்தலாம். [அதை ஒரு போதும் அண்ணன் [பொய் ஜே] செய்ய போவதில்லை என்பது வேறு விஷயம்] அதை விடுத்து 
மமக வினரை மண்ணை  கவ்வ வைப்பேன் என்று மல்லு வெட்டி மைனர் போல கோவணம் கட்டி கொண்டு தை தை  என குதிப்பது ஒருசரியான போக்கு அல்ல! 
ம ம க வினருக்கு  சமூதாய மானம் காக்க தகுதி இருகிறதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்துகொள்வார்கள், ஆனால் அதை விமர்சிக்கும் தகுதி அண்ணனனுக்கு இருக்கிறதா என்றால் ஒரு சொட்டுகூட  இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 

கலைஞர்  எப்படி சுயநலத்துக்காக  தன்னுடைய குடும்பத்தை கொண்டுவந்து கட்சியில் நுழைதாரோ அதுபோல அண்ணன் தன்னுடைய சுயலாபத்திற்காக அப்பாவிகளின் உழைப்பிலும் ரத்தத்திலும் உருவான த த ஜ என்ற அமைபில் தன்னுடைய குடும்பத்தை கொண்டுவந்து சொருகி இருக்கிறார்!
 
கலைஞர்  சூரியனை தன்னுடைய குடும்பத்திற்கு வளைத்து போட்டார் என்றால், அண்ணனோ சூரியனை மட்டுமல்ல சந்திரனையும் சேர்த்து வளைத்து போட்டு இருக்கிறாரே [சண் என்றும் மூன் என்றும்] ,தௌஹீதை ஆயுதமாக பயன்படுத்தி [செயல்படுத்தாமல்] அப்பாவிகளை தக்லீதுகளாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்து வருகிறாரே..இது சமூதாய துரோகம் இல்லையா?
தன்னை[தன் தவறுகளை] எதிர்பவர்களை தன் நிலைக்கு கிழே  இறங்கி நன்றாக கழுவி அவதூறுகளை அள்ளி வீசி ,அவர்களின் அமைப்புகளை கள்ளத்தனமாக களவாடி அவர்களின் கண்ணியத்தை சீர்குலைத்து மக்களை நம்ப வைத்து மாக்கள் ஆக்குகிறாரே?  இது சமுதாய  துரோகம் இல்லையா? எதிர்ப்புகளை நேர் எதிரே நின்று சமாளிக்காமல் கள்ளத்தனமாக வந்து கூவி கூப்பாடு போடுகிறாரே இது சமுதாய துரோகம் இல்லையா?
 

R S S அமைப்பை, பாபர் பள்ளி முதல் கோத்ராவரை நடந்த அநீதியான சம்பவங்களை பட்டியலிட்டு பா.ஜ.க.வை மண்ணை கவ்வ வைப்பேன் ! என்று பேச துணிவில்லாத அண்ணன் ம ம க வை ஒழித்துகட்ட மட்டும் வீர வசனம் [?] பேசுவதேன் ? 

ஏதோ பொய் ஜே தான் தான் சமுதாயம் என்பது போல் எண்ணிக்கொண்டு முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்க த.த.ஜ. செய்ற்குகுழு என செய்தி பரப்பிக் கொண்டு , ஏதோ இவர் சொன்னதும் சமுதாயம் கேட்டுக் கொண்டு அப்படியே ஓட்டளித்து விடும் என்பது போல் பொதுக்குழு கூட்டியும் முடிவெடுக்காமல் , தற்போது செயற்குழுவிலும் முடிவெடுக்காமல் [ பேரம் படியவில்லை போலும்] முடிவெடுக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்கி தீர்மானம் போட்டு வாங்கியுள்ளார்.  .ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் ''இறால் தன்னுடைய தலையில் கழிவை வைத்துகொண்டு மீனை பார்த்து ஏலனமாக சொன்னதாம் உன்னுடைய வயற்றில் அழுக்கு உள்ளது'' என்று. அப்படித்தான் இந்த அண்ணனின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது
 

பள்ளிக்கு  தொழ செல்லாதவர் முஸ்லிம் சமூதாயத்தை பற்றி பேச தகுதி இருக்கிறதா என்றால் இல்லை,தொழுகை இல்லாதவனுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற நபிமொழிக்கு ஏற்றவாறு இஸ்லாத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருவர் இஸ்லாமிய சமூகத்தை பற்றி நீலி அக்கறை படுவது வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்..
 

கலைஞரின்  அந்தரங்கத்தை  அறிந்தவர்கள் அவரை அரசியல் சாணக்கியர் என்பார்கள். அண்ணனின்[பொய் ஜே] அந்தரங்கத்தை    அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் அண்ணன் சாணக்கியரை மிஞ்சிய மகா மட்டமான சாணக்கியர் என்று. அண்ணே! யார் சமூதாய துரோகிகள் என்று காலம் முடிவுசெய்யும் இன்ஷா அல்லாஹ்.
 

இவன் பாக்கரின் ஏகத்துவ பிரச்சார ஏஜன்ட்..
சதாம் ஹுசைன் குவைத்.

0 comments:

Post a Comment