Friday, March 11, 2011

மேலாண்மை விஷயம்; மேலும்- மேலும் மூக்கறுபடும் அண்ணனின் தலையாட்டிகள்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
''எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனம் பேசும் அண்ணன் ஜமாஅத்தின் வளைகுடா மேலாண்மை நிர்வாகி ஒருவர், கடவுள் இல்லை என்ற கொள்கையை விதைத்த பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து விருது பெற்றதோடு, கடவுள் மறுப்பாளர் பெரியாருக்கு புகழ் பாடி, இன்றோடு நான்கு மாதம் 23  நாட்கள் கடந்த பின்னும் அந்த மேலாண்மை மீது நடவடிக்கை  எடுக்கத் தனக்கு தெம்போ, திரானியோ இல்லை என்று பீஜே தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
 
இது தொடர்பாக நாம் எழுதிய முந்தைய ஆக்கங்களை படிக்க; http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post_19.html
 
 
 
மேலாண்மை விஷயத்தில் அண்ணன் தொடர்ந்து மவுனவிரதம் பூண்டுள்ள நிலையில், பொய்களையும்- அவதூறுகளையும் பரப்புவதற்கென்ற அண்ணனின் ஆசியோடு உருவாக்கியுள்ள பொய்யன் தளத்தில் சம்மந்தப்பட்ட மேலாண்மை மீது ஏறத்தாழ ஐந்து மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்து விட்டதாக கதை விட்டார்கள். உடனே நாம், நிகழ்ச்சி நடந்தே நான்கு மாதம் 16  நாட்கள் தான் ஆகிறது ஆனால்  இவர்கள்  ஐந்து மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்ததாக கதை விடுகிறார்கள் என்ற வாதத்தை வைத்தோம். இப்போது கூட பீஜே மவுனம் கலைக்காத நிலையில், மீண்டும் உளறியுள்ள பொய்யன் தளம், நாங்கள் 'ஏறத்தாழ' ஐந்து மாதம் என்றுதான்  எழுதினோம் என்று உளறியுள்ளதோடு, 'ஏறத்தாழ' என்ற வார்த்தைக்கு டிக்ஷனரி விளக்கமும் தந்துள்ளார்கள்.
 
'நாலாம் கிளாஸ் தாண்டாத ஒருவரிடமோ, அவரது ரசிகர்களிடமோ 'ஏறத்தாழ' வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் [பீஜேயின் பாஷையில்]  கூ முட்டைகள் அல்ல. இந்த 'ஏறத்தாழ' வாதத்தை இந்த பொய்யன் கூட்டம் மீண்டும் வைக்க வேண்டும் என்று தான் நாம் அதை கண்டுகொள்ளாமல்  இருந்தோம். இப்போது இந்த பொய்யன் கூட்டம்  தந்துள்ள மொழி அகராதியை முதலில் பார்ப்போம்;
 
ஏறத்தாழ = உத்தேசமாக, தோராயமாக, அனுமானமாக, கணிப்பாக, கூடுதல் குறைவாக‌
 
இவர்களின் மொழி அகராதிப்படி, ஒரு விஷயம் எப்போது நடந்தது என்று அறுதியிட்டு உறுதியாக தெரியாத நிலையில், மேற்கண்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படும். எனவே, மேலாண்மை மீது நடவடிக்கை  எடுத்ததாக  புளுகும் இவர்களுக்கு எந்த தேதியில்  நடவடிக்கை  எடுத்தோம் என்று தெரியவில்லை. [நடவடிக்கை எடுத்தால் தானே தெரிவதற்கு?] எனவேதான் 'ஏறத்தாழ' என்று போட்டு சமாளிக்கப் பார்க்கிறார்கள். ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தார்களாம். 
அதை பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லையாம். சரி எப்பய்யா நடவடிக்கை எடுத்தீங்கன்னா ஏறத்தாழ என்று அனுமானமாக கூறுவார்களாம். 
இதை மக்கள் நம்பனுமாம். 
இவர்கள்தான் மூளையை அடகு வைத்தவர்கள் என்றால் மக்களையும் அவ்வாறு நினைப்பது அறியாமையன்றி வேறென்ன?
 
சரி! இந்த மேலாண்மை மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று பிப்ரவரி 27  ல் பொய்யர்கள்  கூறியதை படியுங்கள்;
 
இவர்கள் குறிப்பிடும் அந்த நபர் குவைத் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.அபுபக்கர் சித்திக் தான்.இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ‌ ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது.இப்படி ஒரு சம்பவம் நடந்தது மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு வரும் முன்பே சம்பந்தப் பட்ட மேலாண்மை குழு உறுப்பினர் தானே முன் வந்து இப்படி ஒருசம்பவம் நடந்து விட்டது. அது என்னை மீறி நடந்தாலும் இது நம் ஜமாத்தின் கொள்கைக்கு அழகல்ல. இதனால் நிர்வாகம் என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் கட்டுப்படுகிறேன் என்றார். மண்டல நிர்வாகம் அவரை மேலாண்மை குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அப்போதே நடவடிக்கை எடுத்தது.அப்படி நடவடிக்கை எடுத்து நீக்கிய‌ பின்புதான் ஜமாஅத் பணிகளில் சாதாரண தொண்டனாக முன்பை விட அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது தனி விஷயம்.
 
இப்படி  மேலாண்மையை நீக்கி நடவடிக்கை எடுத்ததாக பில்டப் பண்ணிய இந்த பொய்யன் கூட்டம், அடுத்து அந்த மேலாண்மை ராஜினாமா செய்ததாக மார்ச் 7  அன்று  உளறியுள்ளதை பாருங்கள்;
 
ஆனால் தான் செய்தது தவறு என்று தானே முன்வந்து கடிதம் கொடுத்து மேலாண்மை பதவியிலிருந்து விலகிக் கொண்ட வளைகுடாகாரர்...
 
ஒரே நபர் விலக்கப்பட்டார் என்றும்- விலகினார் என்றும் உளறுவதில் இருந்தே  இந்த பொய்யர்கள் அந்த மேலாண்மை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்காகவே முன்னுக்குப் பின் உளறிக்கொண்டிருக்கிறார்கள்  என்பதும் மக்களுக்கு புரியாமலில்லை. ஒருவேளை 'தீவுத்திடல்' மாநாடு வெற்றி எதிரொலி; பிரதமர் அழைப்பு என்று பில்டப் பண்ணிவிட்டு, பின்னர் ஹாரூன் மூலம் பிரதமரை  சந்திக்க அனுமதிக் கடிதம் கொடுத்த விவகாரம் வெளியே லீக்கானவுடன், 'நாங்கள்  பிரதமரை சந்திக்க கடிதம் கொடுத்ததும் உண்மை; பிரதமர் அழைத்ததும் உண்மை என்று அசடு வழிந்தார்களே! அதுபோல, மேலாண்மையை நாங்கள் நீக்கியதும் உண்மை; மேலாண்மை விலகியதும் உண்மை என்று சொல்வார்களோ!
 
அடுத்து இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கும், ததஜ வின் அடிப்படைக் கொள்கைக்கும், ததஜவின் பைலாவிற்கும் முரணாக செயல்பட்ட மேலாண்மையை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காதது ஏன்? என்று ததஜ பைலாவில்  உள்ள, '''ஒரு உறுப்பினர் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக நடந்தால் அவர் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்' என்ற பிரிவை  மேற்கோள்காட்டி நாம் கேள்வி வைத்தோம். அதற்கு இந்த பொய்யர்கள், பாக்கர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்து பொதுச் செயலாளர்  பதவியிலிருந்து 44 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போது அவர் அடிப்படை உறுப்பினராக நீடித்தாரா இல்லையா? என்று கேட்கிறார்கள்.
 
இந்த பொய்யர்கள் அண்ணனுக்கு தலையை ஆட்டும்  பணியை மட்டும் செய்யாமல் அவ்வப்போது தங்கள் அமைப்பின் பைலாவையும் படிக்கட்டும். நாம் எப்படி இந்த மேலாண்மை ததஜவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப் படவேண்டியவர் என்பதற்கான ஆதாரத்தை பைலாவில் இருந்து காட்டினோமோ, அதுபோல் பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு விஷயத்தில் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க வழிவகை செய்யும் ஷரத்தை பைலாவில் இருந்து இந்த பொய்யர்கள் காட்ட வேண்டும். மேலும், ஒருவர் எந்த காரியத்தை  செய்தால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார் என்பதற்கு  பீஜே தனது அதிகாரப் பூர்வ இணையதளத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது,
 
''உறுப்பினராக சேர்ந்த நபர் தொழுகையில் கவனக்குறைவாக இருக்கிறார். சினிமா புகை பிடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார். இப்போது இவர் உறுப்பினர் தகுதியை இழக்க மாட்டார். இவற்றைஎல்லாம் செய்யக் கூடாது என்று ஜமாஅத்  இவரிடம் உறுதிமொழி வாங்கவில்லை என்பதே  இதற்கு காரணம்.
 
அதே நேரத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒருவர், நபித்  தோழர்களை பின்பற்றலாம் என்றோ, மத்ஹபை பின்பற்றலாம் என்றோ கூறுவரானால் அவர் உறுப்பினர் தகுதியை இழந்து விடுவார். இவர் தனது கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்டதே இதற்கு காரணம்.
 
பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கும், மேலாண்மை மீதுள்ள குற்றச்சாட்டிற்கும் உள்ள  வேறுபாட்டை  பீஜே வார்த்தையிலிருந்து  இந்த பொய்யர்கள் விளங்கிக் கொள்ளட்டும். எனவே இந்த பொய்யர்கள் எத்தனை முறை உளறினாலும் நாம் விடமாட்டோம். சாட்டையை தொடர்ந்து சுழற்றுவோம். எனவே பீஜெயிக்கு திராணியிருந்தால் அந்த மேலாண்மையை அடிப்படை  உறுப்பினரிலிருந்து நீக்கி, அதை அமைப்பின் அதிகாரப் பூர்வ இணையதளத்திலும், அபகரிக்கப்பட்ட வாரஇதழிலும் வெளியிட்டு தன்னை காத்துக் கொள்ளட்டும். அதைவிடுத்து, அடிப்பொடிகளை ஏவிவிட்டு அர்ச்சனை செய்வதால் மட்டும் நாம் அசந்து விட மாட்டோம் என்பதை ஆணித்தரமாக பீஜெயிக்கு சொல்லிக்கொள்கிறோம்.
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment