Friday, March 4, 2011

தற்காப்பு முயற்சியில் தடுக்கி விழுந்த பீஜே!




ற்காப்பு முயற்சியில் டுக்கி விழுந்த பீஜே!


 ஓரிறையின் திருப்பெயரால்..



 
''எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனம் பேசும் அண்ணன் ஜமாஅத்தின் வளைகுடா மேலாண்மை நிர்வாகி ஒருவர், கடவுள் இல்லை என்ற கொள்கையை விதைத்த பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து விருது பெற்றதோடு, கடவுள் மறுப்பாளர் பெரியாருக்கு புகழ் பாடி வாழ்த்துப்பா எழுதியதையும் மையமாக வைத்து, கடந்த 19 -02 -2011 அன்று பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க அண்ணனுக்கு துணிவுண்டா..? என்ற தலைப்பில் கட்டுரை வடித்தோம் பார்க்க;http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post_19.html
 
சம்மந்தப்பட்ட கட்டுரையை நாம் வெளியிட்டு ஒருவாரம் கடந்த நிலையிலும்,  ஒன்று நாம் வெளியிட்ட செய்தி பொய் என்று பீஜே மறுத்து விளக்கம் தந்திருக்கவேண்டும். அல்லது சம்மந்தப்பட்டவரை நீக்கி, அதை பகிரங்கமாக உணர்வில் வெளியிட்டு, அல்லது அமைப்பின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு, தன்னை முதுகெலும்புள்ள தலைவர் என்று பீஜே காட்டியிருக்க வேண்டும். இதை பீஜே செய்யத் தவறியதையடுத்து, ஒருவாரம் ஓடிப்போச்சு; ஒழுங்கு நடவடிக்கை என்ன ஆச்சு..?? என்ற தலைப்பில் மறு தாக்குதல் தொடுத்தோம். பார்க்க; http://amaibbukal.blogspot.com/2011/02/blog-post_26.html
 
 
இப்போது நாம் பிரச்சினையை கிளப்பி இரண்டு வாரம் கடந்த பின்னும், இன்றைய நிலவரப்படி, அந்த மேலாண்மை பெரியார் புகழ்பாடி, 136  நாட்கள் அதாவது நான்கு மாதம் 16  நாட்கள் கடந்த பின்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தனக்குத் துணிவில்லை என்று பீஜே காட்டிவிட்டார். இதன் மூலம் நாம் ஏற்கனவே கூறியபடி, தனது நடவடிக்கை என்பது கொள்கை அடிப்படையில் அல்ல. அமைப்பின் வருமானத்தின் அடிப்படையிலும், தனது சொந்த  விருப்பு- வெறுப்பு அடிப்படையிலும் தான் என்று தெளிவாக இனம் காட்டியுள்ளார் பீஜே.
 
ஆனால், பொய்களையும்- அவதூறுகளையும் பரப்புவதற்கென்ற உருவாக்கியுள்ள பொய்யன் தளத்தில் சம்மந்தப்பட்ட மேலாண்மை மீது ஏறத்தாழ ஐந்து மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்து விட்டதாக கதை விடுகிறார்கள்.[ஆனால் நிகழ்ச்சி நடந்தே நான்கு மாதம் 16  நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத் தக்கது] 
 
 மேலும்,  இதில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நாம் குற்றச்சாட்டு வைத்தது சாமன்ய உறுப்பினர் மீதல்ல. மாநில செயலாளர் அந்தஸ்தில் உள்ள வெளிநாட்டு நிர்வாகி மீது. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அமைப்பின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் எப்போது எந்த தேதியில் வெளியிட்டார்கள் என்று காட்டவேண்டும்.
 
அடுத்து பாக்கர் மீது குற்றச்சாட்டு வந்தவுடன் அவர், 'என்னால் அமைப்பிற்கு கெட்ட பெயர்  வந்துவிடக் கூடாது என்பதற்காக பொதுச்செயலாளர் பதவியை  தானாக முன்வந்து ராஜினாமா செய்தார் என்ற செய்தியை பகிரங்கமாக உணர்வில் வெளியிட்ட பீஜே, இந்த மேலாண்மை மீது எடுத்த நடவடிக்கையை மட்டும்  உணர்வில் வெளியிடாதது ஏன்? அப்படி வெளியிட்டிருந்தால்  எந்த எடிசனில் இந்த செய்தி வந்தது என்று காட்டவேண்டும்[ நம்மிடம் ஐந்து வருட உணர்வு சேகரிப்பில் உள்ளது. எனவே ஏமாற்ற முடியாது] இல்லை பாக்கர் மீது வந்த குற்றச்சாட்டை விட, பெரியாருக்கு புகழ்பாடுவது சாதாரண குற்றம் என்று அண்ணன் கருதிவிட்டாரா? அல்லது தீனார்கள் பார்வைத் திறனை மறைத்து விட்டதா?
 
அடுத்து அந்த பொய்யன் தளத்தில், சம்மந்தப்பட்ட மேலாண்மையை பதவியை விட்டு மட்டும் நீக்கியதாகவும், அவர் உறுப்பினராக வீரியமாக[?] செயல்படுகிறார் என்றும் கூறியுள்ளார்கள்.
ஆனால் அமைப்பு விதி[பைலா] யில், 'ஒரு உறுப்பினர் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக நடந்தால் அவர் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்' என்று உள்ளதே!
 
ததஜவின் அடிப்படைக் கொள்கை என்பது குர்'ஆனும்- ஆதாரப்பூர்வ  நபிமொழியும் தான் என்று ஆக்ரோஷமாக முழங்கும் அண்ணன், பெரியாருக்கு புகழ்பாடி  இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாகவும், குர்'ஆன்-ஹதீசுக்கு மாற்றமாகவும் நடந்தவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காதது ஏன் என்பதற்கும் பதிலளிக்க வேண்டும். அல்லது அடிப்படை உறுப்பினராக இருந்து கொண்டு பெரியாருக்கு புகழ்  பாடலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவர அண்ணன் தயாரா?
 
ஆக, அந்த மேலாண்மை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபற்றிய அமைப்பின் அதிகாரப் பூர்வ தகவல் எதிலும் இல்லை. ஒரு பலம் வாய்ந்த நிர்வாகி மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு  கள்ளத்தன பிளாக்குகளில் தகவல் தரும் அளவுக்கு ததஜ தரம் கெட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்றாக  உள்ளது.
 
எனவே மீண்டும் சொல்லிக் கொள்கிறோம் பீஜெயிக்கு துணிவிருந்தால் அந்த மேலாண்மை மீது ஐந்து மாதத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட நடவடிக்கையை, தனது அமைப்பின் அதிகாரப் பூர்வ இணையதளத்திலும், அபகரிக்கப்பட்ட வார இதழில் இருந்தும் காட்டட்டும். இல்லையேல்,
தனது கோழைத்தனத்தை ஒத்துக் கொள்ளட்டும்.
 
[குறிப்பு; இப்போது சூடு பட்ட பூனையாக, முன் தேதியிட்டு செய்தியை இணையத்தில் வெளியிட்டு அதைக் காட்டி 'தில்லாலங்கடி' வேலை காட்ட வேண்டாம். ஏனெனில் சம்மந்தப்பட்ட அந்த மாதமும், அதற்கு அடுத்த மாதமும் ததஜ நெட்டில் வெளியான செய்திகளை தேதிவாரியாக  நாம் பாதுகாத்து வைத்துள்ளோம். எனவே ஏய்க்க நினைத்து முகத்தில் கரி பூசிக் கொள்ள வேண்டாம் என்று சக முஸ்லிம் என்ற அடிப்படையில் அறிவுறுத்துகிறோம்] 
 
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment