Sunday, March 13, 2011

இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு எத்தனை இடம் ? எங்கு ?

இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு எத்தனை இடம் ? எங்கு ? 


அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டிலும், இஸ்லாமிய அமைப்புகள் சில மக்கள் சபைகளில் இடம் பெறும் முயற்சியிலும் , மற்றும் சில அமைப்புகள் எங்களுக்கு சட்டசபையில் இடம் வேண்டாம் ! உங்கள் மனதில் இடம் தந்தால் போதும்! என  அரசியல் தலைவர்களின் மனதில் இடம் பெரும் முயற்சியிலும் அவர்களின் சந்திப்பிற்கும் முயற்சித்து கொண்டும், அவர்களிடம் உலகாதய பேரங்களிலும் ஈடுபட்டு கொண்டிருக்க , இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன இலக்கு நோக்கி தெளிவாக சென்று கொண்டிருப்பதை கடந்த 13.3.11 ஞாயிறு அன்று செயல் பாடுகளின் மூலம் நிருபித்தது!

மக்கள் சபைகளில் இடம் வேண்டாம்! மறுமையில் அல்லாஹ்வின்    சுவனத்தில் இடம் வேண்டும்! அரசியல்வாதிகளின் மனதில் இடம் வேண்டாம்! அல்லாஹ்வின் மனதில் இடம் பெற வேண்டும்! தலைவர்கள் சந்திப்பு தேவையில்லை! சர்சுகளிலும் ,கடற்கரையிலும் மருத்துவ மனைகளிலும் சென்று பிற மத சகோதர சகோதரிகளுக்கு, இணைவைப்பிலும் , வழிகேட்டிலும் மூழ்கி கிடக்கும் அந்த மக்களை சந்தித்து அவர்களை நேர்வழியில் அழைக்கும் பணியை செய்தது!


காலை 9 மணிக்கு அமிஞ்சிக்கரை பகுதியில் உள்ள ஒரு சர்ச் வாயிலில் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் , ஹபிப் தலைமையிலான குழு 
'இயேசு அழைக்கிறார் ' எனும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியது! சர்ச் வாசலில் முஸ்லிம்கள் நின்று அழைப்பு பணி செய்வதை அனைவரும்  கண்டு வியந்தனர். 


மாலை 4 மணிக்கு மாநில அழைப்பு பணிக்குழு தலைவர் இனயதுல்லாஹ் தலைமையில் மாநில பேச்சாளர்  மைதீன் மற்றும் சூலை மேடு கிளை சகோதர சகோதரிகள் கடற் கரையில் அழைப்பு பணி செய்தனர்! வழக்கம் போல் முஸ்லிம் அல்லாதவர்களோடு  வந்த முஸ்லிம் பெண்கள் நால்வருக்கு அறிவுரை வழங்கப் பட்டது! மேலும் மெகா போன் மூலம் சமூகத் தீமைகளை இஸ்லாம் என் எதிர்க்கிறது என எடுத்து சொல்லப் பட்டது!

மாலை 5 மணிக்கு மாநில செயலாளர் செங்கிஸ் கான் மற்றும் திருவல்லிக்கேணி மற்றும் மன்னடி சகோதரர்கள் 20 பேர் அடங்கிய குழு 
ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை சென்று சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்காக பிரார்த்தனை செய்து , பிஸ்கட் பழங்கள் வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி நபிகள் நாயகத்தை அறிமுகம் செய்தனர். அரசு மருத்துவ மனைகளில் அல்லலுறும் அவர்கள் கசியும் கண்களோடு நம் சொல்லுக்கு செவி சாய்த்தது நெகிழ்ச்சியை அளித்தது!      





கிறிஸ்தவ தேவாலய வாசலில் 

    



















ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில்






























கடற்கரையில் அழைப்பு பணி       









கிளி ஜோஷ்ய காரரிடம்
குடும்பத்திடம்






காதல் ஜோடியிடம்









0 comments:

Post a Comment