Friday, March 4, 2011

பாபர் மசூதி இடிப்பு வழக்கு - அத்வானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அத்வானிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அத்வானி மீதான குற்றச் சாட்டுக்களை ஏற்க மறுத்த ரேபரேலி நீதிமன்றம் சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. சிபிஐயின் மனுவை அலாகாபத் உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.


இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணைக்கு பதில் அளிக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


-- 
Thanks&Regards

 M.NOORULAMEEN                              
 cell;9787332923                                                

0 comments:

Post a Comment