Wednesday, March 2, 2011

அடிப்படைவாதமும்-வீரமணியின் அறியாமையும்!


டவுள் இல்லை என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, கல்லால் செய்யப்பட்ட பெரியார் சிலைக்கு பிறந்த நாள், இறந்த நாளுக்கு மாலை அணிவித்து, கையெடுத்துக்  கும்பிட்டு, பெரியாரை அறிவிக்கப்படாத கடவுளாக கருதும் பகுத்தறிவுவாதி[?]யும், திக தலைவருமான கி.வீரமணி அவர்கள் ஒரு கேள்விக்கு இப்படி பதிலளிக்கிறார்.
 
கேள்வி: இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட நாடுகளில்கூட அடிப்படைவாதப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றனவே?
- மு.அ.நக்கீரன், தரங்கம்பாடி

பதில்: இஸ்லாமிய அடிப்படைவாதம் - தீவிரவாதம் - பயங்கரவாதம் - வன்முறை குண்டு வெடிப்புக் கலாச்சாரத்தைப் பரப்புகின்றன.  அடிப்படைவாதம் என்றால் இந்நிலைதான்.
அதாவது இஸ்லாமிய அடிப்படைவாதம்,  தீவிரவாதம் - பயங்கரவாதம் - வன்முறை குண்டு வெடிப்புக் கலாச்சாரத்தைப் பரப்புகின்றன என்கிறார் வீரமணி. இஸ்லாம் வன்முறையை பரப்பச் சொல்கிறதா என்பதை பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னால் அடிப்படைவாதம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
அடிப்படைவாதம் என்பது, ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல்; சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல்; தற்கால சமூக, அரசியல் வாழ்க்கை முறைகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுப்பதற்கு எதிரான எதிர்வினை போன்றவற்றைக் குறிக்கும். என்று அடிப்படைவாதத்திற்கு விளக்கமளிக்கிறது விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம்.
இந்த வகையில் இஸ்லாமிய கொள்கை மீது ஒருவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தால் அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. நாத்திக கொள்கை மீது ஆழமான நம்பிக்கை கொண்ட வீரமணி நாத்திக அடிப்படைவாதி. அவ்வளவுதான். இதில் பயங்கரவாதமும், வன்முறையும் எங்கே நுழைந்தது என்பதை வீரமணி விளக்குவாரா? மேலும் இஸ்லாமியக் கொள்கையாவது தீவிரவாதம் பயங்கரவாதம் - வன்முறை குண்டு வெடிப்புக் கலாச்சாரத்தைப் போதிக்கிறதா என்று பார்த்தால்,
"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்'' என்று கூறி, மனிதநேயத்தைத்தான் போதிக்கிறது மாமறைக் குர்'ஆன். எந்த உயிரையும் அநியாமாக பறிக்கும் வன்முறைக்கும்-பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்தில், வீரமணி பாஷையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் கடுகளவும் அனுமதியில்லை என்பதை வீரமணியார்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும், இஸ்லாத்தை முழுமையாக, ஆழமான நம்பிக்கை கொள்வதால், உங்கள் பார்வையில் நாங்கள்  அடிப்படைவாதிகள்  என்றால் அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இதற்கு பின்னும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை வன்முறையை தூண்டுகிறது என்பதுதான் உங்களின் நிலை என்றால், இது குறித்து தங்களுடன் கலந்துரையாட நாங்கள்  தயாராக  இருக்கிறோம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment