Friday, March 18, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[21] just4joes! Inbox X


பஞ்ச் பட்டிக்காட்டான்[21] just4joes!

 முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி: வரும் தேர்தலில், "தனிப் பெரும்பான்மை பெறும்' என, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. தேர்தலுக்குப் பின், ஒரு வேளை எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், வேறு ஏதேனும் ஒரு கட்சியின் தயவுடன் தான் ஆட்சி அமையும். ஆட்சியில் அந்தக் கட்சிக்கு உரிய பங்கு கொடுப்பது அவசியம். இல்லையேல், நடப்பது நம் ஆட்சி அல்ல என்ற எண்ணம் ஏற்படும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஏன் இப்பிடி சுத்தி வளைக்கிறீங்க? ஆட்சில பங்கு வேணும்னு நேரடியாவே கேட்டுற வேண்டியதுதானே.


தமிழக மாணவர் காங்கிரஸ் பொதுச் செயலர் அருண்பிரசாத் அறிக்கை: சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், "பஸ் தின விழா' கொண்டாடிய போது, மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்துள்ள மோதலை, பாரபட்சமின்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். கல்லூரி தேர்வு, சட்டசபை தேர்தல் எதிர்நோக்கியுள்ள வேளையில், மாணவர் சக்தியை மதிக்கின்ற வகையில், 300 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என, தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.


பஞ்ச் பட்டிக்காட்டான்;  ஒய்வு பெற்ற நீதிபதிகள வச்சு உங்க கட்சி நியமிச்ச விசாரணைக் கமிஷன்கள் தந்த அறிக்கையெல்லாம் எந்த நிலமையில இருக்குன்னு தெரிஞ்சுமா இன்னும் விசாரணைக்குழு அமைக்கணும்னு சொல்றீங்க?


ஒபாமா அறிக்கை; சர்வதேச விதிமுறைகளை மீறியும் கண்ணியமற்ற முறையிலும் கடாபியின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகளை அந்த அரசாங்கம் தொடர்ந்து மீறி வருகிறது. சொந்தநாட்டு மக்கள்மீதே கொடூர அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதனால் சர்வதேச கண்டனத்துக்கு அந்த நாடு உள்ளாகி இருக்கிறது. இதனால் அந்த நாட்டு அரசாங்கம் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்து உள்ளது.
பஞ்ச் பட்டிக்காட்டான்;  அதான் சரி! போர்'ன்ற பேருல, ஜனநாயகம்ன்ற பேருல மக்களை கொல்றதுக்கு நீங்க இருக்கும்போது கடாபி மக்களை கொல்றது சர்வாதிகாரம் தானுங்கோ!


தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேச்சாளர் வாகை முத்தழகன் பேட்டி: "மிசா' காலத்திலிருந்து, கண்ணீரும், ரத்தமும் சிந்தி, கருணாநிதிக்காக உழைத்தவன் நான்; இன்று கருணாநிதி அதை மறந்துவிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம் உள்ளது. அதை காப்பாற்ற காங்கிரஸ் தேவை என்பதால், கருணாநிதி என்னைக் கைவிட்டுவிட்டார்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; 'கட்டுக்கட்டாக' தந்ததாக கூறப்படும் ராசாவையே அம்போன்னு விட்டுட்டு, அடுத்த ஆட்சி பத்திய கவலையில இருக்கும்போது, நீங்க கண்ணீரும், ரத்தமும் சிந்தினேன்னு சொல்றதால எந்த புன்னியமுமில்லைங்கோ!


அ.தி.மு.க., இலக்கிய அணிச் செயலர் வைகை செல்வன் பேச்சு:பிரான்சில், சீக்கியர் முடியை வெட்டியவுடன் பிரதமர் கொந்தளிக்கிறார். சீக்கியரின் முடிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தமிழனின் உயிருக்குக் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதற்கு மத்திய அரசை தி.மு.க., உலுக்கி எடுக்க வேண்டாமா? நான் கருணாநிதிக்கு ஐந்து லட்சம் தருகிறேன்; உங்கள் மகன்களில், யாரையாவது மீன் பிடிக்க அனுப்புவீர்களா?

பஞ்ச் பட்டிக்காட்டான்; உடன்பிறப்பே! ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டவுடன்,   அதை கண்டிக்கும் வகையில் நமது கழக எம்.பி.க்கள் ராஜினாமா கடிதத்தை  வாங்கி அதை நானே வைத்துக் கொண்டதும், 'எல்லாம்' முடிந்த பின் என் மகள் அடங்கிய குழுவை அனுப்பி ஈழத்தை பார்வையிட செய்ததும், ஈழம் குறித்து  நான்  பிரதமருக்கு கடிதம் எழுதியதாலேயே நஷ்டத்தில் இயங்கிய அஞ்சல் துறை புத்துயிர் பெற்றதும் தம்பி வைகை செல்வன் அறியவில்லை போலும். இப்போதும் சொல்கிறேன், கழக ஆட்சி மீண்டும் அமைந்தால் ஈழ மக்கள் பிரச்சினை பற்றி பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதுவேன் என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
லிபியா அதிபர் மும்மர் கடாபி; எங்கள் நாட்டு மக்களை திசை திருப்பி அவர்களை குழப்பி கலவரத்தினை உண்டாக்கியதே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தான். இச்சதிச்செயலை அவர் திறமையாக கையாண்டுள்ளார். 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; உங்கள சர்வாதிகாரின்னு சொல்றாங்க. ஆனா நீங்க சொல்லியிருக்குறத பாத்தா சரியான  'காமெடிபீஸு'  மாதிரில தெரியுது.
 
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பேட்டி: தனி மனிதர்களுக்கிடையே நடைபெறும் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்பதை தடுக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தொலைபேசி உரையாடல் பதிவுகளும், அவற்றை வெளியிட ஊடகங்களும் தயாராக இருப்பதும் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கக் கூடியது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; தொலைபேசியே தொல்லைபேசிதான் போல. அரசாங்கம் ஒருபுறம் ஒட்டுக் கேக்குது. இன்னொரு பக்கம் போன போட்டு கோபம் வர்ற மாதிரி பேசியும், பொம்பள குரல்ல 'கிளுகிளுப்பா' பேசியும் ஆளை உசுப்பேத்தி பதிவு பண்ணி நெட்டுல போட்டு அக்கப்போர் பண்ணுற கூட்டம் தொல்லை வேற. ஒரே கஷ்டமப்பா!
அ.தி.மு.க., அமைப்புச் செயலர் பொன்னையன் பேச்சு: பொது வாழ்வில், தூய்மை கடைபிடிக்க வேண்டும் என, ஈ.வெ.ரா., கூறினார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என, அண்ணாதுரை கூறினார். எம்.ஜி.ஆருக்குப் பின், ஜெயலலிதா தான் எளிமையின் உருவமாகத் திகழ்கிறார். தமிழ் சமுதாயத்திற்காக, தமிழ் மக்களுக்காக, தினமும், 18 மணி நேரம் உழைக்கிறார்.
 பஞ்ச் பட்டிக்காட்டான்; புகழுரதுக்கும் ஒரு அளவு வேணாமா? ஒரு பொதுக்கூட்டம் நடத்துன உடனே ஒரு மாசம் ஓய்வெடுக்க கேளம்பீருவாங்க உங்க அம்மா. ஒரு வேளை அறிக்கை மட்டும் வெளியிடுறத வச்சு சொல்றீங்களோ?

0 comments:

Post a Comment