Tuesday, March 29, 2011

முஸ்லிம்களுக்கு சீட் தராவிட்டாலும் பா.ம.க.வை ஆதரிப்பேன்! முஸ்லிம்களாக இருந்தாலும் ம.ம.க.வை தோற்கடிப்பேன்!


முஸ்லிம்களுக்கு சீட் தராவிட்டாலும் பா.ம.க.வை ஆதரிப்பேன்!
முஸ்லிம்களாக இருந்தாலும் ம.ம.க.வை தோற்கடிப்பேன்!


நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ள தனிநபர் ஜமாஅத், திமுகவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற தனது ஏக்கத்திற்கு  ஏதுவாக இலவச இணைப்பாக சில கட்சிகளை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதில் ஒன்றுதான் மருத்துவர் ராமதாஸின்  பாட்டாளி மக்கள் கட்சி.  இக்கட்சி பற்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிநபர் ஜமாஅத் கொண்ட கொள்கை முழக்கத்தை நினைவு படுத்தி விட்டு பின்னர் விஷயத்திற்கு வருவோம்.


5-4-2009 கோவையில் TNTJ மாநிலப் பொதுக்குழு கூடியது இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்று;
5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


தனிநபர் ஜமாஅத் மேற்கண்ட தீர்மானத்தில் பாமக பற்றிக் கூறியுள்ள விஷயத்தில் எந்த மாற்றமாவது  ஏற்பட்டுள்ளதா? முஸ்லிம்களுக்கு தீவிரவாத பட்டம் சுமத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டதால் இந்த சட்டமன்றத் தேர்தலில்  பாமகவை ஆதரிக்கிறார்களா? இந்த தேர்தலில்  முஸ்லிம் வேட்பாளர் பலரை பாமக நிறுத்தியதால் தனிநபர் ஜமாஅத் ஆதரிக்கிறதா? முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் செய்த உள்குத்து வேலையை பாமக விட்டு விலகிவிட்டதாக, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு புதுவையில் பாமக பாடுபடுவதாக  தனிநபர் ஜமாத்திற்கு ஏதேனும்  அறிவிப்பு வந்ததால் ஆதரிக்கிறார்களா?


மேலும், திமுக ஆதரவு கண்ட தனிநபர் ஜமாஅத்தின் பொதுக்குழுவில், முஸ்லிம்களுக்கு  ஒரு தொகுதி கூட ஒதுக்காத  பாமக பற்றி கேள்வி எழுப்பப் பட்டபோது அந்த தனிநபர், 'பாமக ஒரு ஜாதிக் கட்சிமா; அவன் ஒரு முஸ்லிம்களை நிறுத்தலன்னு சொல்றதே முட்டாள்தனம் என்று திருவாய் மலர்ந்தார்.


ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமகவை நாம் ஆதரிக்கனுமா என்று கேட்டால் அவ்வாறு கேட்பதே முட்டாள்தனம் என்று இன்று கூறும் இந்த தனிநபர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாமக முஸ்லிம்களை நிறுத்தாதது  பற்றி தீர்மானத்தில்  கொண்டுவந்தது முட்டாள்தனமில்லையா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் அண்ணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.


மேலும் பாமகவை ஜாதிக்கட்சி என்று இந்த தனிநபர் எந்த அடிப்படையில் கூறுகிறார்? ஒரு வாதத்தை வைக்கிறார். அதாவது ராமதாஸ், வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்று சொல்லி விட்டாராம். எனவே பாமக ஜாதிக்கட்சியாம். ராமதாஸ் சொன்னது அவரது இன உணர்வு. தனது சமுதாயத்தின் மீதான அக்கறை. தனது சமுதாய ஒட்டு வன்னியரைத் தவிர வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது. தனது சமுதாயத்தின் வாக்கு வங்கி தனது சமுதாயத்தின் வெற்றிக்கே பயன்படவேண்டும் என்ற அவரது சமுதாய நலன் சார்ந்த நோக்கம். அப்படி அவர் தனது சமுதாய வாக்குகளை ஒருங்கிணைத்து சில வெற்றிகளை ஈட்டியதால்தான் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் அவரோடு கூட்டணி வைக்க போட்டி போடுகின்றன. அவரது கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி உடையதாக இருந்தாலும் தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திராவிடக் கட்சிகள் முன் வந்ததற்கு காரணம் அவரது சமுதாய ஓட்டுக்களை ஒருங்கினைத்ததே!

ஆனால் இந்த தனிநபரோ தானும் தனது ஜமாஅத்தும்  மட்டுமே முஸ்லிம் சமுதாய பாதுகாவலர்கள்; சமுதாய நலன் விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு, சமுதாயத்தின்  வாக்குகளை பிரித்ததோடு, தனது வரட்டு கவுரவத்திற்காக  முஸ்லிம் சமுதாய வேட்பாளரை தோற்கடித்து, சமுதாயத்தின் வாக்குகளை அடுத்தவர் அறுவடை செய்ய திட்டங்கள் தீட்டுகிறார். தீர்மானங்கள்  போடுகிறார். இவர் ராமதாஸிடம் பட்டும்  படிக்கட்டும்.
ஆனாலும் நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்[!?]


குறிப்பு; பாமக  குறித்து நாங்கள் வைத்த குற்றச்சாட்டு இன்னும்  அப்படியேதான் உள்ளது. பாமக எந்த வகையிலும் தன்னை  மாற்றிக்கொள்ளவில்லை. ஆனாலும் பாமகவை ஆதரிப்போம். ஆனால் மமக குறித்த விசயத்தில் மாத்திரம் மண்ணைக்கவ்வ வைக்கும் எங்களின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஏனெனில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதால்.

0 comments:

Post a Comment