Thursday, March 3, 2011

குஜராத் ரயில் எரிப்பு வழக்கு; விடுதலையான அப்பாவிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குக!


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை (22. பிப்ரவரி 2011) வெளியாகியிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில், 31 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டவர் உட்பட 63 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என விடுதலையான 63 பேருக்கு, குஜராத் அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பற்றி தினமணி இதழில் பிரபல பத்திரிக்கையாளர் திரு. அருன்நேரு அவர்கள், 'தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு'  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி;
''முதலாவது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு. பெரும்பான்மை, சிறுபான்மைச் சமூக எண்ணத்தை மக்களிடையே வளர்த்ததால் ஏற்பட்ட பிரச்னை இது என்பதை இனியும் மறுத்துக்கொண்டிருந்தால் தீர்வு ஏற்படாது. மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு படிப்படியாகத்தான் தீர்வு காணவேண்டும்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்பே இல்லாத 63 அப்பாவிகள் 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதற்கு யார் காரணம் என்று லாவணி பாடிக்கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மாநில அரசின் சார்பில் இந்தத் தொகையை வழங்கி புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப்பிறகு தவறாகக் கைது செய்யப்பட்டு குவாந்தநாமோ சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்பட்ட 5 பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசு நஷ்ட ஈடு அளித்ததையே இதற்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
நன்றி : தினமணி.
தகவல் : முகவை அப்பாஸ்.

0 comments:

Post a Comment